சுமார் இரண்டு பக்கங்களில் தங்கிலிஸில் அதுவும், பொதுவாக ஒரு பக்கமும் தாய், தந்தைக்கு என சிறு தலைப்பிட்டு மற்றுமொரு பக்கத்திலும் மொத்தமாக இரண்டு பக்கங்களில் கடிதமொன்றை எழுதி வைத்துவிட்டு, பெண்ணொருவர் தவறான முடிவை எடுத்துள்ளார்.

பொதுவாக ஒருபக்கத்தில் எழுதிய கடிதத்தில் 1,000 தடவைகள் மன்னிப்பு, மன்னிப்பு என குறிப்பிட்டு, இதயமொன்றையும் அப்பெண் வரைந்துள்ளார். இந்த சம்பவம் இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட டெல்மார் மேற்பிரிவில் இடம்பெற்றுள்ளது.

அப்பெண்ணின் சடலம், இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இராகலை டெல்மார் மேற்ப்பிரிவு குளத்தில் இருந்து டெல்மாக் தோட்டம் உடப்புஸ்ஸலாவையைச் சேர்ந்த 18 வயதான சுதர்ஷிகா என்ற யுவதியின் சடலமே புதன்கிழமை (03) பிற்ப்பகல் இராகலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டும் நாட்களாகக் காணவில்லை என தேடப்பட்டு வந்த குறித்த யுவதியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சடலம் நுவரெலியா மாவட்ட நீதவான் முன்னிலையில் இராகலை பொலிஸார் மற்றும் நுவரெலியா குற்றத் தடயவியல் பொலிஸார் இணைந்து மீட்டுள்ளனர். சடலம் பிரேதப் பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

குறித்த பெண் 16 வயதில் தான் விரும்பிய நானுஓயா பகுதியைச் சேர்ந்த ஆணுடன் வீட்டை விட்டுப் புறப்பட்டு, சில காலம் தனியாக இருந்துள்ளனர். பின்னர் குறித்த ஆணுடனும் குடும்ப அங்கத்தவர்களுடனும் சில கசப்பான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

“எனக்கு பிரச்சினைகளை சமாளித்துக் கொள்ள முடியவில்லை, மன அழுத்தம் மாத்திரம் காரணம் என்றும் தனது முடிவுக்கு தானே பொறுப்பு என்றும் “அம்மா, அப்பா, என்னை மன்னித்து விடுங்கள். இந்த வாழ்க்கை மிகவும் கடினமாக உள்ளது. நான் இங்கிருந்து செல்கிறேன் அத்துடன் யாரையும் தண்டிக்க வேண்டாம்” என்றும் எழுதப்பட்டுள்ளது.

குறித்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இராகலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version