வவுனியா ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் இன்று சனிக்கிழமை (06) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில்,
அநுராதபுரத்திலிருத்து யாழ்ப்பாணம் நோக்கிச்சென்றுகொண்டிருந்த ரயில் ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் பகுதியில் கடவையினை கடக்கமுற்பட்ட கெப் ரக வாகனத்துடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.
விபத்தில் கெப் ரக வாகனம் கடுமையான சேதமடைந்ததுடன், அதன் சாரதி படுகாயமைடந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் சிலவருடங்களுக்கு முன்பு இடம்பெற்ற விபத்தில் நான்குபேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
விபத்து தொடர்பாக ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.