“ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் இரண்டு ஆண்டுகளை கடந்து நடைபெற்று வருகிறது. இருதரப்பும் தாக்குதலை தீவிரப்படுத்தி வரும் நிலையில், ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

போர் களத்தில் தினந்தோறும் உயிரிழப்புகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், உக்ரைன் நாட்டை சேர்ந்த சிறுவன் தனது நாட்டின் மீது வைத்த பாசத்தை அந்நாட்டு ராணுவ வீரர்கள் அங்கீகரித்த உணர்வுப்பூர்வமான சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

போர் மூண்டுள்ள உக்ரைன் நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் வசித்து வரும் சிறுவன் ஒருவன் தினமும் உக்ரைன் நாட்டு ராணுவ ஹெலிகாப்டர்களை பார்த்து கை அசைப்பதை வாடிக்கையாக கொண்டிருந்துள்ளான்.

கையில் உக்ரைன் தேசிய கொடியுடன் சிறுவன் தினமும் உக்ரைன் ராணுவ ஹெலிகாப்டர்களை பார்த்து கொடியசைப்பதை ராணுவ விமானி ஒருவர் கவனித்துள்ளார்.

அந்த வகையில், சிறுவனின் தேச பக்தியை பாராட்ட அந்த ராணுவ விமானி முடிவு செய்தார். அப்படியாக வழக்கமான ராணுவ பணிகளுக்கு இடையில், சிறுவன் கொடியுடன் நிற்பதை பார்த்த விமானி உடனே தனது ஹெலிகாப்டரை தரையிறக்கினார்.

பிறகு, சிறுவனிடம் ஓடிச் சென்ற விமானி அவனிடம் நிவாரண பொருட்களுடன் மிட்டாய், பொம்மை மற்றும் உணவு உள்ளிட்டவை அடங்கிய பரிசு பெட்டகத்தை வழங்கினார்.

சிறுவனின் தேச பக்தியை வெகுவாக பாராட்டிய விமானி, அங்கிருந்து வேகமாக கிளம்பி சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரல் ஆகி வருகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version