நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இந்தியாவின் தனுஷ்கோடியில் நாட்டு மக்கள் அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் உட்பட 3 நபர்கள் தனுஷ்கோடி அடுத்த ஐந்தாம் மணல் தீடையில் திங்கட்கிழமை (22) காலை தஞ்சம் அடைந்துள்ளனர்.

அப்பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள், இவர்கள் தொடர்பில், பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதை அடுத்து சுட்டெரிக்கும் வெயிலில் வெப்பத்தில் சூடு தாங்க முடியாமல் ஐந்தாம் மணல் தீடையில் தஞ்சம் அடைந்த இலங்கை அகதிகளை மரைன் பொலிஸார் அதிரடியாக நடவடிக்கை எடுத்து கடலுக்குள் சென்று பாதுகாப்பாக மீட்டு கரைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இதனால் சூடு தாங்க முடியாமல் தவித்த தங்களை மீட்ட மரைன் பொலிஸாருக்கு மூவரும் நன்றி தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

Share.
Leave A Reply

Exit mobile version