வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் மூன்று வாகனங்கள் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து பட்டானிச்சூர் அரச பாடசாலையினை அண்மித்த பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) மதியம் இடம்பெற்றுள்ளது .

வேன், முச்சக்கரவண்டி , மோட்டார் சைக்கில் ஆகிய மூன்றும் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளன.

மூவர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version