கந்தளாய், ரஜஎல பிரதேசத்தில், ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்ற வேன் விபத்தில் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
கந்தளாய், ரஜஎல நான்காம் யூனிட் பகுதியை சேர்ந்த , கந்தளாய் மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் ஜே . எம் . ஜீ . ஹசினி பிரபோதனி என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார் அவர் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி பெறுபேறுகளுக்காகக் காத்திருந்தவர் என தெரியவந்துள்ளது .
குறித்த மாணவி தனது உறவினர் வீட்டில் இருந்து தனது வீட்டிற்க்கு நடந்து சென்றுக் கொண்டிருந்த போது பின்னால் வந்த வேன் வேக கட்டுப்பாட்டை இழந்து, அருகிலிருந்த மரத்தில் மோதி , வீதியை விட்டு விலகி, யுவதி மீது மோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .