உலகின் தொன்மையான நகரங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஏதென்ஸ், (24.04) திடீரென செம்மஞ்சள் நிறத்தில் காட்சியளித்தது.

நவீன ஒலிம்பிக் போட்டிகளின் தாயகமாக விளங்கும் ஏதென்ஸ் பல புராதன கட்டடங்களையும் தொல்லியல் சிறப்பு வாய்ந்த நினைவுச் சின்னங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

இந்நிலையில், கிரேக்கத் தலைநகர் ஏதென்ஸில் புராதன ஒலிம்பிக் மைதானம் அமைந்துள்ள Syntagma Square, Parthenon ஆலயம், Lycabettus குன்றுகளை உள்ளடக்கிய பழைய அகோரா, Acropolis உட்பட ஏதென்ஸ் நகரமே செம்மஞ்சள் நிறத்தில் காட்சியளித்தது.

இதனால் உள்ளூர்வாசிகளும் சுற்றுலாப்பயணிகளும் அச்சமடைந்தனர்.

சஹாரா பாலைவனத்தில் இருந்து ஏற்பட்ட புழுதிப் புயல் செம்மஞ்சள் நிறத்தில் ஏதென்ஸின் பல பகுதிகளை மூடியதால் இந்த நிலை ஏற்பட்டதுடன், இதனால் பொதுமக்களுக்கு சுகாதார எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளது.

வானிலை மாற்றம் காரணமாக ஆபிரிக்காவில் இருந்து தூசுகள் நகர்ந்து வளிமண்டலத்தில் செறிவுகள் அதிகரித்துள்ளதாக கிரேக்கத்தின் வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

வட ஆப்பிரிக்காவில் இருந்து கிரீஸ், சிப்ரஸ், மாசிடோனியோ உள்ளிட்ட நாடுகளுக்கு இந்த காலகட்டத்தில் மேகக்கூட்டங்கள் நகர்வது வாடிக்கைதான் என்றாலும், சஹாரா பாலைவனத்தின் மண் துகள்கள் கலந்ததால் கிரீஸை செம்மஞ்சள் போர்வை போர்த்தியது போல் புழுதிப்புயல் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலை ஓரிரு தினங்களில் மாற்றமடையும் எனவும் கூறப்பட்டுள்ளது.

 

Share.
Leave A Reply

Exit mobile version