இலங்கை சிறார்களை மலேசியா ஊடாக ஐரோப்பாவிற்கு அனுப்பி ஆட்கடத்தலில் ஈடுபட்ட நபர் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று (25) மாலை குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக திணைக்களத்தின் விசாரணை அதிகாரி காரியவசம் தெரிவித்துள்ளார்.
தெஹிவளையை சேர்ந்த 76 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர், இலங்கையை சேர்ந்த 17 சிறார்களை சட்டவிரோதமாக நாட்டில் இருந்து வௌியேற்றி ஆட்கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த நபர் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இளுக்குபிட்டிய உத்தரவிட்டிருந்தார்.
அதற்கமைய, குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகள் மலேசியாவின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியதுடன், சந்தேகநபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.