பீடியை பற்ற வைக்க முயன்ற வேளை படுக்கையில் தீ பற்றிக்கொண்டமையால் முதியவர் ஒருவர் தீயில் எரிந்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – அளவெட்டி பகுதியை சேர்ந்த ஐயம்பிள்ளை தேவராசா (வயது 73) என்பவரே உயிரிழந்துள்ளார்.

முதியவர் தனது மகள் வீட்டில் வசித்து வந்த வேளை , நேற்றைய தினம் வியாழக்கிழமை வீட்டில் எவரும் இல்லாத வேளை பீடியை பற்ற வைக்க முயன்றுள்ளார். அதன் போது தீ படுக்கையில் பற்றிக்கொண்டமையால் , தீயில் சிக்கி முதியவர் உயிரிழந்துள்ளார் என பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் , சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version