நாளை (03) மனித உடலால் அதிக அளவில் உணரக்கூடிய வெப்பம் காணப்படும் என வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி மேற்கு, சப்ரகமுவ, தெற்கு, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மற்றும் மொணராகலை மாவட்டங்களிலும் இந்த நிலை காணப்படும் எனவும் வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, சிறுவர்கள், முதியவர்கள்,குழந்தைகளை அவதானமாக இருக்குமாறும், வெளியில் செல்வதை முடிந்தவரை தவிர்க்கமாறும், நேரம் கிடைக்கும் போது நிழலில் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

 

Share.
Leave A Reply

Exit mobile version