தாலி கட்டும் நேரத்தில் மணமேடையில் நிகழ்ந்த துயரம் : மின்சாரம் தாக்கி மணப்பெண் ஸ்தலத்தில் பலி!
மணமேடையில் தாலி கட்ட இருந்த சமயத்தில் மணமகள் திடீரென மின்சாரம் தாக்கி உயிரிழந்தமை திருமணத்திற்கு வந்த அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த சம்பவம் இந்தியாவின் ஆந்திர மாநிலம், ரணஸ்தலம் அடுத்த அல்லி வலசை பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் இடம்பெற்றது.
தாலி கட்டுவதற்குரிய மந்திரங்களை பூசாரி ஒலிவாங்கியில் உச்சரித்துக் கொண்டிருந்தார்.இதன்போது திடீரென ஒலிவாங்கியில் மின்சாரம் பாய்ந்ததால் ஒலிவாங்கியை பூசாரி தூக்கி வீசினார்.
மின்சாரம் தாக்கியதில் பூசாரி வெங்கட்ரமணா, மணமகளின் பெற்றோர், உறவினர்கள் உள்ளிட்ட 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
இவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
சிறிது நேரத்தில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் திருமண மண்டபத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.