“விமான பயணங்களின் போது பயணிகளின் சில வித்தியாசமான செயல்கள் சமூக வலைதளங்களில் வைரலாவதுண்டு.
அந்த வகையில் தற்போது இணையத்தில் பரவி வரும் வீடியோ ஒன்றில், பெண் பயணி ஒருவர் லக்கேஜ் வைக்கும் இடத்தில் படுத்து உறங்குவது போன்று காட்சிகள் உள்ளது.
‘தென்மேற்கு வைல்டின்’ என்ற தலைப்பில் டிக்-டாக்கில் பதிவிடப்பட்ட அந்த வீடியோ 50 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை கடந்துள்ளது.
வீடியோவில், பெண் பயணி லக்கேஜ் வைக்கும் இடத்திற்குள் படுத்திருப்பதை பார்த்து சக பயணிகள் மனம் விட்டு சிரிக்கும் காட்சிகளும் உள்ளது. இந்த சம்பவம் சவுத் வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானத்தில் நடைபெற்றுள்ளது. வீடியோவை பார்த்த பயனர் ஒருவர், ‘மற்ற பயணிகளின் அருகே அமர்ந்து தூங்குவதற்கு அந்த பெண் மிகவும் சங்கடமாக இருந்திருப்பார் என நான் நினைக்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.”,