இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பேச்சுவார்த்தை நடத்தியும் ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி தம்பதி பிரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபலங்களின் வாழ்க்கையில் திருமணம் விவாகரத்து என்பது சகஜமான ஒரு நிகழ்வாக மாறிவிட்டது. அதிலும் குறிப்பாக திரைத்துறையில் அவ்வப்போது முன்னணி நட்சத்திரங்கள் பலரும் விவாகரத்து பெற உள்ளதாக அறிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே தனுஷ் – ஐஸ்வர்யா, ஒரு பக்கம் விவாகரத்து பெற்று பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது இந்த வரிசையில் ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி தம்பதி இணைந்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி மகன் என்ற அடையாளத்துடன் திரைத்துறையில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ்.

2006-ம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவர், தொடர்ந்து பொல்லாதவன், ஆடுகளம், தெறி உள்ளிட்ட பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இசையமைப்பாளராக மட்டுமல்லாமல், மதயானை கூட்டம் என்ற படத்தை தயாரித்த ஜி.வி.பிரகாஷ்,

2015-ம் ஆண்டு வெளியான டார்லிங் என்ற படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். தொடர்ந்து அடியே, நாச்சியார் உள்ளிட்ட பல படங்களில் நடித்த ஜி.வி.பிரகாஷ் தற்போது இசை நடிப்பு என பிஸியான இருந்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் டியர் என்ற படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், ஜி.வி.பிரகாஷ் கடந்த 2013-ம் ஆண்டு சைந்தவி என்ற பாடகியை திருமணம் செய்துகொண்டார்.

அந்நியன் படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமான சைந்தவி கடைசியான மார்க் ஆண்டனி என்ற படத்தில் பாடியிருந்தார்.

ஜி.வி – சைந்தவி இருவருக்கும் திருமணமாகி 9 வருடங்கள் கடந்துள்ள நிலையில், தற்போது இருவரும் விவாகரத்து பெறுவதாக அறிவித்துள்ளனர்.

இவர்களின் விவாகரத்து குறித்து பயில்வான் ரங்கநாதன் கூறுகையில், நடிகராகவும் இசையமைப்பாளராகவும் இருக்கும் ஜி.வி.பிரகாஷ், நடிகைகளுடன் நெருக்கமான காட்சிகள் நடித்து வருகிறார்.

இது சைந்தவிக்கு பிடிக்காததால் கடந்த 4 வருடங்களாக இருவருக்கும் இடையே பிரச்சனை இருந்து வருகிறது. இடையில் ஏ.ஆர்.ரஹ்மான் சொல்லிலும் இவர்கள் கேட்காத நிலையில், தற்போது இருவரும் விவாகரத்து அறிவித்துள்ளதாக கூறியுள்ளார்.

 

Share.
Leave A Reply

Exit mobile version