“உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் இரண்டு வருடத்துக்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரில் இரு தரப்பிலும் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
இருப்பினும் ரஷ்யா எந்த சமரசமுமின்றி தொடர்ந்து போரை முன்னெடுத்து வருகிறது. உக்ரைனும், மேற்கு நாடுகளின் உதவியுடன் ரஷ்யாவின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த நிலையில் சீன அதிபர் ஜீ ஜிங் பிங்கை சந்திக்க சீனா சென்றுள்ள ரஷ்ய அதிபர் புதின், அங்கு உரையாற்றுகையில், ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதியில் உக்ரைன் சமீபத்தில் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக உக்ரைனின் கார்கிவ் பிராந்தியத்தில் தொடர் தாக்குதல் நடத்தி வருவதாக தெரிவித்தார்.
அதற்கு பதிலாக இரண்டு நாடுகளுக்கும் பொதுவானதொரு இடைப்பட்ட பாதுகாப்பு பகுதியை ( BUFFER ZONE) உருவாக்குவதே தங்களின் திட்டமாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.
மேற்கு நாடுகளின் ஒன்றிணைந்த நேட்டோ நாடுகளில் உக்ரைன் சேரும் பட்சத்தில் உக்ரைன் வழியாக எளிதில் ரஷ்யாவுக்குள் நேட்டோ படைகள் வந்துவிடும் என்ற அச்சுறுத்தல் இருப்பதாலேயே இந்த போர் நடந்து வருகிறது.
எனவே இரண்டு நாடுகளுக்குமாக BUFFER ZONE உருவாகும் பட்ச்சத்தில் இந்த அச்சுறுத்தல் விலகும் என்பதாலேயே ரஷ்யா இந்த போரை அதை நோக்கி கொண்டு செல்வதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
முன்னதாக சீனா சென்றுள்ள ரஷ்ய அதிபர் புதின், அந்நாட்டு அதிபர் ஜீ ஜிங் பிங்கை சந்தித்து பேசி, போரை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வது பற்றியும், இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாகவும் முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. “,