“அமெரிக்காவில் உள்ள கென்டக்கி மற்றும் இண்டியானா மாகாணங்களுக்கு இடையே போக்குவரத்துக்கான இணைப்பு பாலமாக கிளார்க் மெமோரியல் பாலம் உள்ளது.
ஓஹியோ நதிக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள கிளார்க் பாலத்தை செகென்ட் ஸ்ட்ரீட் பாலம் என்றும் அழைக்கின்றனர்.
இந்த பாலத்தில் கடந்த மார்ச் 18 ஆம் தேதி டிரக் ஒன்று எதிரில் வந்த கார் மோதியதில் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் பக்கவாட்டு தடுப்பை உடைத்துக்கொண்டு ஆற்றை நோக்கி பாய்ந்து அந்தரத்தில் தொங்கியது.
இந்த விபத்து சம்பவத்தில் மீட்புக்குழு விரைந்து செயல்பட்டதால் அதிர்ஷ்டவசமாக பெண் ஓட்டுநர் உயிர்தப்பினார்.
சினிமாவில் வரும் கட்சிகளுக்கு இணையாக இந்த விபத்து மற்றும் மீட்புப் பணி தொடர்பான காட்சிகள் அந்த சமயத்தில் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் விபத்துக்குள்ளான டிரக்கில் பொருத்தப்பட்டிருந்த டாஸ் காம் கேமராவில் விபத்துக்கு சில நொடிகளுக்கு முன் ஓட்டுநர் டிரக்கை இயக்கிய காட்சிகளும் பாலத்தின் பக்கவாட்டு தடுப்பை உடைத்துக்கொண்டு டிரக் ஆற்றை நோக்கி பாயும் காட்சிகளும் வெளியாகியுள்ளது.
விபத்தை மிக அருகில் இருந்து அது எப்படி நடக்கிறது என்பதை விறுவிறுப்பான இந்த வீடியோவில் தெளிவாக பார்க்கமுடிகிறது.
இதனால் இந்த வீடியோ X தளத்தில் 13 மில்லியன் பார்வைகளைத் தாண்டி வைரலாகி வருகிறது. டாஸ்காம் என்பது கார், டிரக் உள்ளிட்ட வாகனங்களில் விண்ட் ஸ்க்ரீனில் பொருத்தப்படும் வீடியோ பதிவு செய்யும் கருவி என்பது குறிப்பிடத்தக்கது. “,
JUST IN: Dashcam footage released of the semi-truck that launched over the edge of the 2nd Street Bridge in Kentucky.
33-year-old Trevor W. Branham has been charged for the crash.
Branham’s Chevrolet truck can be seen speeding and swerving before weaving out of the way to avoid… pic.twitter.com/pfNJYJKOMg
— Collin Rugg (@CollinRugg) May 16, 2024