யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் (18) மழையுடன் வீசிய காற்று காரணமாக ஆலயம் ஒன்றின் கூரை முழுமையாக சேதமாகியுள்ளதாக யாழ்ப்பாண அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இதனால் யாருக்கும் உயிராபத்து ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.