திருகோணமலை மாவட்டத்தின் சல்லி கடல் பகுதியில் , கடலுக்கு சென்ற மீனவர்கள் இருவரை காணவில்லை என மீனவர்களின் குடும்பங்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த திங்கட்கிழமை (20) சல்லி பிரதேசத்தில் இருந்து காலை 10.மணியளவில் கடலுக்கு சென்ற வட்டாரம் – 2 சல்லி பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய குட்டிராசா சசிக்குமார் மற்றும் 22 வயதுடைய முருகையா சுஜந்தன் ஆகிய இருவர் தொடர்பில் எந்த தகவலும் கிடைக்கவில்லை என அவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் , சல்லி பிரதேச மீனவர்கள் சிலர் காணாமல் போன இருவரை தேடி கடலுக்கு சென்றுள்ள நிலையில் இது தொடர்பில் கடற்படைக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர் .