– மருத்துவத் துறைக்கு தெரிவான இரு மாணவர்களுள் ஒருவர்

ஊரே கதறியழ இன்று (15) உலகுக்கு விடைகொடுத்த மாணவன் அக்சயனின் இறுதி யாத்திரை அனைவரதும் மனங்களை நெகிழச்செய்தது.

அழுகுரலால் அவருடைய வீடு மட்டுமல்ல அப்பிரதேசமே அதிர்ந்தது. சோகம் ததும்பியது.

காரதீவைச் சேர்ந்த காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி மாணவன் சிவா அக்ஷயன் (20) மாணவன் நேற்று (14) உகந்தை சென்று வரும் வழியில் பொத்துவிலை அண்டிய பகுதியில் லாகுகலை எனும் இடத்தில் நீலகிரி ஆற்றில் நீராடுகையில் நீரில் மூழ்கி மரணம் சம்பவித்துள்ளது.

காரைதீவைச் சேர்ந்த 20 வயததான சிவகரன் அக்சயன் என்ற மாணவன் நேற்று (14) காலை நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

சிவகரன் ஜீவரஞ்சனி தம்பதியினரின் ஒரேயொரு பிள்ளை அக்சயன் என்பதும் காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் இம்முறை மருத்துவத் துறைக்கு தெரிவான இரண்டு மாணவர்களுள் அக்சயன் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் காரைதீவு பிரதேசத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இம் மாணவன் இம்முறை வெளியாகிய உயர்தரப் பரீட்சை புள்ளிகளின் அடிப்படையில் 2023(2024) மருத்துவத்துறையில் அம்பாறை மாவட்டத்தில் 23 ஆவது இடத்தையும் Z- புள்ளிகள் 2.0556 பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

அவர் தனது குடும்பத்தோடு மூன்று நாட்களுக்கு முன்பு உகந்த மலை முருகன் ஆலயத்துக்கு சென்று அங்கு தரித்துவிட்டு நேற்று காலை வரும்பொழுது பொத்துவில் லாகுகலை நீலகிரி ஆற்றிலே நீராடிய போது மூழ்கி மரணமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

காரைதீவிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்ட பூதவுடலுக்கு இன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் மாணவர்கள் வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர். நீண்ட இரங்கல் நிகழ்வும் நடைபெற்றது .

 

Share.
Leave A Reply

Exit mobile version