பொதுவாக குழந்தைகள் பிறக்கும் போது பல் இருக்காது. குழந்தை வளரும் போது பற்களும் வளர ஆரம்பிக்கும். சராசரியாக ஒரு நபருக்கு 32 பற்கள் வெளிவர 21 வருடங்கள் ஆகும். பற்களின் வளர்ச்சியில் பல்வேறு காரணங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இந்நிலையில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு குழந்தை பிறக்கும் போதே முழுமையாக 32 பற்களுடன் பிறந்துள்ளது.
இந்த புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ஒரு பெண், தனது பெண் குழந்தையின் 32 பற்கள் கொண்ட வீடியோவை பகிர்ந்துள்ளார்.