யாழ்ப்பாணத்தில் வீதியால் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த சம்பவத்தில் யாழ்.வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 56 வயதான நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நேற்றையதினம் (22-07-2024) உரும்பிராயில் உள்ள தனது சகோதரியின் வீட்டுக்கு சென்றுவிட்டு, மோட்டார் சைக்கிளுக்கு காற்று நிரப்புவதற்காக உரும்பிராய் வேம்பன் வீதியால் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த வேளை திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

 

உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

அதேவேளை குறித்த மரணமானது மாரடைப்பு காரணமாக சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version