முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சண்ட் தம்பதிக்கு கொடுக்கப்பட்ட திருமண பரிசுகள் தொடர்பான ஆச்சர்ய தகவல்கள் வெளியாகியுள்ளன.
முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் தொடர்பான செய்தியே கடந்த சில நாட்களாக இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது.
இந்நிலையில் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சண்ட் தம்பதிக்கு கொடுக்கப்பட்ட திருமண பரிசுகள் தொடர்பான வாயை பிளக்க வைக்கும் சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
உலகப்பெரும் பணக்காரர்களில் ஒருவரான அம்பானி, சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் தனது மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தை நடத்தி முடித்துள்ளார்.
இவர்களது திருமணம் மற்றும் ரிசப்ஷனுக்கு உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றாலும், முக்கிய பிரபலங்கள் தவறாமல் இடம்பெற்றிருந்தனர்.
திருமண பரிசாக முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி சார்பாக விலையுயர்ந்த கார், நூறு கோடி ரூபாய் வைரம் மற்றும் முத்துக்கள் அடங்கிய நகைகள் பரிசளிக்கப்பட்டது.
அத்தோடு, Palm Jumeirah வில் சுமார் 3 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் சொகுசு மாளிகையை பரிசாக வழங்கியது முகேஷ் அம்பானி – நீதா தம்பதி. இதன் மதிப்பு சுமார் 640 கோடி ரூபாய் என்கிறது தரவுகள். இந்த சொகுசு மாளிகையில் 10 Bedrooms மற்றும் ஒரு தனி கடற்கரையும் அடக்கம்.
திருமண விழாவில் பங்கேற்ற பாலிவுட் நடிகர் ஷாருக்கான், சுமார் 40 கோடி ரூபாய் மதிப்பில் ஃபிரான்ஸில் உள்ள பிளாட்டை பரிசாக வழங்கியுள்ளனர்.
அதேபோல், 16 கோடி ரூபாய் மதிப்பிலான புது வகை ஸ்போர்ட்ஸ் பைக்கை பரிசாக வழங்கியுள்ளார் சல்மான் கான்.
தொடர்ந்து, 20 கோடி ரூபாய் மதிப்பிலான ரோல்ஸ் ராயல்ஸை ரன்வீர் சிங் – தீபிகா படுகோன் தம்பதி பரிசாக வழங்கியுள்ளனர்.
இதேபோல், ரன்பீர் கபூர் – ஆலியா பட் தம்பதியினர் 9 கோடி மதிப்பிலான Mercedes car ஐ பரிசாக வழங்கியுள்ளனர்.
அக்ஷய் குமார் 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க பேனாவை வழங்கியுள்ளார். நடிகர் – நடிகைகள்தான் பரிசளித்தார்களா என்றால் இல்லை. உலகப்பணக்காரர்கள் தொடங்கி பேஸ்புக், கூகுள் நிறுவனங்களின் தலைமை நிலைய அதிகாரிகள் வரை முக்கிய பிரபலங்கள் பரிசுகளை வாரி வழங்கியுள்ளனர்.
ஃபேஸ்புக் தலைமை நிலய அதிகாரி மார்க் செக்கர்பர்க் 300 கோடி ரூபாய் மதிப்பிலான ஜெட் விமானத்தை வழங்கியுள்ளார்.
இத்தோடு புகழ்பெற்ற அமெரிக்க மல்யுத்த வீரர் ஜான் சீனா 3 கோடி ரூபாய் மதிப்பிலான Lamborghini காரை பரிசளித்துள்ளார்.
நாம் குறிப்பிட்டதோடு மட்டுமல்லாமல், திருமண நிகழ்வில் பங்கேற்ற பல விருந்தினர்கள் விலை உயர்ந்த பரிசுகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது.