‘ஐ ஷோ ஸ்பீடு’ என்ற பெயரில் பிரபலமான யூ-டியூபர் ஸ்ட்ரீமர் . 19 வயது இளைஞரான இவர் பல்வேறு சாகசங்களை வீடியோவாக பதிவு செய்து யூடியூப் மற்றும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.
இவரை பல லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள்.இவர் சமீபத்தில் வேகமாக ஓடி வரும் காரை, தாவிக்குதித்து தாண்டியபடி வீடியோ பதிவு செய்தார்.
இவருக்காக, இவரது தந்தை தங்களுக்கு சொந்தமான சொகுசு காரை வேகமாக ஓட்டி வருகிறார்.
ஓடி வரும் காருக்கு முன்னே தைரியமாக நிற்கும் ஸ்ட்ரீமர் சரியான நேரத்தில் காரை தாவிக்குதித்து, உயரம் தாண்டும் வீரர் போல அந்தப் பக்கம் சாய்ந்துவிடாமல் கம்பீரமாக நிற்கிறார்.
பின்னர் சாகசத்தை வெற்றிகரமாக முடித்ததற்காக சந்தோஷத்தில் ஆர்ப்பரிக்கிறார். தந்தையுடன் ஹைபை செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்.
அந்த வீடியோவை பின்னர் வலைத்தளத்தில் பதிவேற்றினார். “இந்த சாகசத்தை செய்த உலகின் முதல் நபர் நானாகத்தான் இருப்பேன். லைக் பண்ணுங்க, சேர் பண்ணுங்க” என்று பேசுகிறார். இரண்டே நாளில் இந்த வீடியோவை சுமார் 4 கோடி பேருக்கு மேல் ரசித்துள்ளனர்.
i just jumped over a car it was so scary 😆 pic.twitter.com/MNchIaUg2W
— Speed⭐️ (@ishowspeedsui) July 25, 2024