மட்டக்களப்பு காத்தான்குடி பிரதான வீதியில் நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்துள்ளனர்.

காத்தான்குடி மீரா பாலிகா மகளிர் கல்லூரிக்கு முன்பாக மோட்டார் சைக்கிளை தலைக்கவசமின்றி செலுத்தி வந்த இரு இளைஞர்கள், முன்னாள் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

தலைக்கவசம் அணியாததால் பறிபோன உயிர் | A Life Lost Due To Not Wearing A Helmet Accidentஇதன்போது மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததுடன் , பின்னால் அமர்ந்திருந்வர் படுகாயம் அடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version