பிரபல பாலிவுட் ஸ்டார் சல்மான் கான், ஜேக்கப் & கோ நிறுவனத்தின் விலையுயர்ந்த கடிகாரத்தை அணியும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகியிருக்கிறது.

உலகின் விலை உயர்ந்த கை கடிகாரங்களைத் தயாரிக்கும் நிறுவனம் ஜேக்கப் & கோ. வைர நகை வடிவமைப்பாளரான ஜேக்கப் அரோரா என்பவரால், 1986-ம் ஆண்டு அமெரிக்காவில் சிறியளவில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், இன்று உலகம் முழுவதும் எலைட் மக்களின் பிரதான விருப்ப நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது.

வைரம், மரகதம் போன்ற விலையுயர்ந்த கற்களால் அழகுப்படுத்தப்படும் இந்த கடிகாரத்துக்கு விளையாட்டு வீரர்கள் முதல் ஹாலிவுட் ஸ்டார்கள் வரை ரசிகர்கள் இருக்கிறார்கள்.

சல்மான் கானுடன்

இந்த நிலையில், பிரபல பாலிவுட் ஸ்டார் சல்மான் கான், ஜேக்கப் & கோ நிறுவனத்தின் விலையுயர்ந்த கடிகாரத்தை அணியும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகியிருக்கிறது.

அந்த வீடியோவில், ஜேக்கப் & கோ நிறுவனர் ஜேக்கப் அரோரா `Jacob & Co Billionaire III’ என்ற விலையுயர்ந்த கடிகாரத்தை சல்மான் கானுக்கு அணிவிக்கிறார்.

அந்த கடிகாரத்தின் உள் வளையம், மொத்தம் 152 வைரக்கற்களால் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு பிரிவிலும் 76 வைரங்கள் பொருத்தப்பட்டிருக்கிறது.

வெளி வளையம் 504 மரகத, வைரக்கற்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. இந்த கடிகாரத்தில் மட்டும் மொத்தம் 714 வெள்ளை வைரக்கற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தற்போதுவரை உலகளவில் 18 கைகடிகாரங்கள் மட்டுமே இருக்கும் இதன் விலை, இந்திய மதிப்பில் ரூ.41.5 கோடி.

இந்த கடிகாரத்தை அணிந்து போஸ் கொடுக்கும் சல்மான் கானின் அந்த வீடியோவை, தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ஜேக்கப் அரோரா, “எனது Billionaire III வாட்சை யாரும் அணிந்து பார்க்க அனுமதித்ததில்லை.

ஆனால், நடிகர் சல்மான் கானுக்கு மட்டும் அதிலிருந்து விதிவிலக்காக அளித்திருக்கிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார். இந்தப் பதிவை சல்மான் கானின் ரசிகர்கள் பலரும் பகிர்ந்து, வைரலாக்கி வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version