காசாவில் இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 41,020 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் இஸ்ரேலிய படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 32 பேர் கொல்லப்பட்டனர். தெற்கு காஸாவில் மவாசி என்ற பகுதியில் பாதுகாப்பு முகாம்களில் தங்கியிருந்தவர்கள் மீதும் குண்டுவீசப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்களை குறிவைத்தே தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் கூறுவது முற்றிலும் பொய்யான தகவல் என்றும் ஹமாஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஐநா பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்பினர் சர்வதேச மனித உரிமைகள் விதிகளை மதிக்க வேண்டும் என்று ஐநாவின் சிறப்பு ஒருங்கிணைப்பாளர் Tor Wennesland கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் பிணைக்கைதிகளை இருதரப்பினரும் விடுவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கடந்தாண்டு அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் ஆயுதப்படையினர், 200க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்துச்சென்றனர். இதனால் காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்து வருகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version