நாய்கள் விசுவாசத்திற்கு பெயர்பெற்றவை. அவற்றின் அன்பு நம்மை பல நேரங்களில் நெகிழ வைக்கும்.
பாசமான ஒருநாய், தனது எஜமானரை ஏற்றிச் சென்ற ஆம்புலன்சை துரத்திச் செல்லும் காட்சியால் சமூக வலைத்தளம் நெகிழ்ந்துள்ளது.
அந்த நாயின் எஜமானர் நோய்வாய்ப்பட்டு ஆம்புலன்சில் ஏற்றப்பட்டபோது, நாய், வெகுதூரம் வரை ஆம்புலன்ஸ் பின்னால் ஓடிச் சென்றது. இதை கவனித்த ஆம்புலன்ஸ் பணியாளர்கள், இறுதியில் ஆம்புலன்சை நிறுத்தி, நாயை உள்ளே அனுமதித்த பின்பே அது அமைதியானது.
எக்ஸ் வலைத்தளத்தில் வெளியான இந்த வீடியோ 30 லட்சம் பேரின் பார்வைகளைப் பெற்றது.
கருத்து பகுதியில், பலரும் தங்கள் செல்லப் பிராணியின் அன்பைப் பற்றிய பல நினைவுகளைப் பகிர்ந்தனர்.