யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய சமுத்திரத்தீர்த்த திருவிழாவின் போது ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்த நிலையில் , மற்றுமொருவர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியை சேர்ந்த கந்தசாமி வினோகரன் (வயது 54) என்பவரே உயிரிழந்துள்ளார். நுணாவில் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய இளைஞனே கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்திர மகோற்சவ திருவிழாவின் சமுத்திர தீர்த்த திருவிழா நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமைக்கு மாலை இடம்பெற்றது.

அதன் போது பெருமளவானோர் கடலில் நீராடினார்கள். அவ்வேளை ஒருவர் கடலில் மூழ்கிய நிலையில் அவரை அருகில் நின்றவர்கள் காப்பாற்றி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் , அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் அறிக்கையிட்டுள்ளனர்.

அதேவேளை நீராடிக்கொண்டிருந்த இளைஞன் ஒருவரும் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார். காணமால் போனவரை நேற்றைய தினம் இரவு வரையில் கடலில் தேடிய நிலையில் அவர் மீட்கப்படவில்லை.

Share.
Leave A Reply

Exit mobile version