சீனாவில் ‘ஆர்டர் கிங்’ என்று அழைக்கப்படும் டெலிவரி செய்யும் நபர் 18 மணி நேர வேலைக்கு பிறகு தனது பைக்கில் தூங்கிக் கொண்டிருந்தபோது பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கடந்த செப். 6-ம் திகதியன்று Zhejiang மாகாணத்தில் Hangzhou இல் யுவான் உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் இடைவிடாது தினமும் 18 மணி நேரம் வேலை செய்வதால் பரவலாக அறியப்பட்டவர். “ஆர்டர் கிங்” என்ற புனைப்பெயராலும் அவர் அறியப்பட்டார். அதே போல், 18 மணி நேரம் ஆர்டர்களை டெலிவரி செய்துவிட்டு, யுவான் தனது மின்சார பைக்கில் தூக்கத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் செப். 5-ம் திகதி இரவு 9 மணி முதல் அடுத்த நாள் அதிகாலை 1 மணிக்கு மற்றொரு டெலிவரி நபரால் கண்டுபிடிக்கப்படும் வரை பைக்கில் உறங்கியபடியே இறந்து கிடந்துள்ளார்.

யுவான் பொதுவாக ஒரு நாளைக்கு 500 முதல் 600 யுவான் வரை சம்பாதிப்பதாகவும், மழை நாட்களில் 700 யுவானுக்கு வருமானம் அதிகமாகும் என்றும் அவரது நண்பர்கள் தெரிவித்தனர். தினமும் அதிகாலை 3 மணி வரை வேலை செய்துவிட்டு, காலை 6 மணிக்கு எழுந்து மீண்டும் டெலிவரி வேலையைத் தொடர்வார் என்று கூறப்படுகிறது. யுவான் தனது 16 வயது மகனுக்கு ஆதரவாக ஹூபே மாகாணத்திலிருந்து ஹாங்ஜோவுக்கு குடிபெயர்ந்தார்.

ஒருவர், “ஆர்டர் கிங் வீழ்ந்துள்ளார். இந்த அவலங்களைத் தவிர்க்க வழி இல்லையா?” என பதிவிட்டிருந்தார். மற்றொரு நபர், “அவர் தனது 50 வயதுகளில் அவருடைய குடும்பத்தின் ஒரே ஆதாரமாக இருந்தார். இரவும் பகலும் உழைத்தார். அவர் நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும். அவரது அடுத்த ஜென்மத்தில் அவர் இப்படி காலத்தை எதிர்த்து போராடமாட்டார் என்று நம்புகிறேன். டெலிவரி டிரைவர்கள் எதிர்கொள்ளும் கடுமையான வேலை நிலைமைகள், தொழில்துறையில் இருப்பவர்களுக்கு சிறந்த பாதுகாப்பு மற்றும் ஆதரவின் தேவை பற்றிய பரவலான கவலையை இவர்களின் பதில்கள் பிரதிபலிக்கின்றன.

Share.
Leave A Reply

Exit mobile version