நாவலமுல்ல – மீகொடை வீதியில் சிரிமெதுரவத்த பிரதேசத்தில் பஸ்ஸின் சில்லுக்குள் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று புதன்கிழமை (18) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

மீகொடதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.

இவர் மற்றுமொரு நபருடன் சேர்ந்து தனியார் பஸ் ஒன்றில் ஏறுவதற்கு முயன்ற போது பஸ்ஸின் மிதிபலகையிலிருந்து தவறி வீழ்ந்து பஸ்ஸின் சில்லுக்குள் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண்ணின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, விபத்தினை ஏற்படுத்திய பஸ்ஸின் சாரதி வேகமாக பஸ்ஸை செலுத்தி சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மீகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version