ஸ்திரமான மற்றும் வளமான இலங்கையை கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்காக எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதற்கும் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்காக அவரது அயராத முயற்சிகள் உண்மையிலேயே குறிப்பிடத்தக்கவை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ எக்ஸ் பக்கத்தில் செய்துள்ள பதிவில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் வரலாற்றில் ஏற்பட்ட பாரிய பொருளாதார நெருக்கடியைத் தீர்க்கும் பாரிய சவாலை துணிச்சலுடன் ஏற்றுக்கொண்ட தருணத்திலிருந்து அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றதையிட்டு நான் பெருமையடைகிறேன்.
கடந்த இரண்டு ஆண்டுகளில், அவர் இந்த நெருக்கடியை சமாளிப்பது மட்டுமல்லாமல், நாட்டின் பொருளாதாரத்தையும் மாற்றியுள்ளார். சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதற்கும் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை வளர்ப்பதற்கும் அவரது அயராத முயற்சிகள் உண்மையிலேயே குறிப்பிடத்தக்கவை.
ஸ்திரமான மற்றும் வளமான இலங்கையை கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்காக எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஜனாதிபதித் தேர்தலில் அவருக்கு ஆதரவளித்து வாக்களித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.