அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) முதலிடம் பெற்ற ஒருவர் திருமணத்திற்காக தனது தோழியிடம் ரூ.50 கோடி வரதட்சணை கேட்டுள்ளார் என்று பெங்களூரை சேர்ந்த பெண் ஒருவர் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டாக்டர் பீனிக்ஸ் என்ற ஐடியில் இருந்து இந்த பதிவு இடப்பட்டுள்ளது. அந்த பதிவில், “சிறுநீரக மருத்துவ படிப்பிற்கான எய்ம்ஸ் நுழைவுத்தேர்வில் முதல் இடத்தை பெற்ற ஒருவருடன் எனது தோழிக்கு திருமண வரன் பார்க்கப்பட்டது.

எனது தோழியும் ஒரு மருத்துவர் தான். அவர் அனஸ்தீசியா படிப்பில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். எய்ம்ஸ் தரவரிசையில் முதல் இடம் பிடித்தவர் அனஸ்தீசியா படிப்பில் முதுகலை பட்டம் பெற்ற எனது தோழியின் குடும்பத்தினரிடம் ரூ.50 கோடி வரதட்சணை கேட்டுள்ளார்.

ஒரு மருத்துவருக்குத் தன் சொந்தக் காலில் நிற்க கூட துணிவு இல்லையென்றால் இந்தக் கல்வியால் என்ன பயன்?ரூ.50 கோடி என்பது எனது தோழியின் பெற்றோரின் வாழ்நாள் சேமிப்பு.

தெலுங்கு சமூகத்தில் அவளை திருமணம் செய்து வைப்பதற்கு வரதட்சணை மற்றும் தங்களின் ஓய்வுக்கால சேமிப்பு முழுவதுமாக தேவை என்று அவளது பெற்றோர்கள் கூறுவதால் எனது தோழி காலையிலிருந்தே அழுது கொண்டிருக்கிறாள்.

எனது தோழியின் தங்கைக்கு திருமணம் செய்துவைக்கும் போதும் அவளது பெற்றோர்கள் வரதட்சணை கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு இணையத்தில் வைரலாக வரதட்சணை முறைக்கு எதிராக நெட்டிசன்கள் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version