மானிப்பாய் – கைதடி பிரதான வீதியில் நேற்று திங்கட்கிழமை (11) இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார்.

இதன்போது அரசடை வீதி வட்டுத்தெற்கு வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 53 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது வீதியில் சென்ற இன்னொரு மோட்டார் சைக்கிளில் சென்ற நபரை முந்திச் செல்வதற்கு முயற்சித்தார்.

இதன் போது குறித்த மோட்டார் சைக்கிளுடனும் மோதி, கிளுவை மரத்துடனும் மோதி விபத்து சம்பவத்தில் அவர் உயிரிழள்ளந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலமானது உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Share.
Leave A Reply

Exit mobile version