“கடந்த நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் வரும் ஜனவரி மாதம் 2 வது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்கிறார்.
கடந்த 2016 முதல் 2020 வரையிலான டிரம்பின் ஆட்சிக்காலத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் இருந்ததைப்போல் அவரது இரண்டாவது பதவிக்காலமும் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் தான் பதவியேற்றதும் கனடா, மெக்சிகோ மற்றும் சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக அளவில் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்தார்.
இந்நிலையில் டிரம்ப் அறிவிப்பு எதிரொலியாகவும் ஏற்கனவே சீனா மீது அமெரிக்கா செய்யப்படுத்தியுள்ள செமிகண்டக்டர் கட்டுப்பாடுகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும் சீனா அமெரிக்கவுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
சீனாவில் செமிகண்டெக்டர் தொழிற்சாலை வர்த்தகம் அதிகம் பாதிப்படடும் சூழலில் டிரம்ப் அறிவிப்பும் சேர்ந்து சீனாவை கோபப்படுத்தி உள்ளது.
அமெரிக்காவுக்கு சீனாவில் இருந்து ஏற்றுமதியாகும், காலியம் [gallium], ஜெர்மானியம் [germanium], ஆண்டிமனி [antimony] மற்றும் பிற முக்கிய உயர் தொழில்நுட்ப பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிப்பதாக சீனா நேற்று அறிவித்துள்ளது.
செமிகண்டெக்டர் ஏற்றுமதி கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், சீன நிறுவனங்களுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள், சீனாவின் தொழில்நுட்ப முன்னேற்றத்துக்கு தீங்கிழைக்கும் வகையில் உள்ள அமெரிக்காவின் நடவடிக்கைக்கு சீனா கடுமையான எதிர்ப்பை பதவி செய்வதாக நேற்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் பேசியுள்ளார்.
தடைவிதிப்பதாகக் கூறியுள்ள காலியம் மற்றும் ஜெர்மானியத்தின் மிகப்பெரிய ஆதாரமாக சீனா உள்ளது.
மொபைல் போன்கள், கார்கள், கணினி பாகங்கள் , சோலார் பேனல்கள் மற்றும் இராணுவ தொழில்நுட்ப சாதனங்களை உருவாக்க இவை தேவைப்படுகிறது. பேட்டரிகள் முதல் ஆயுதங்கள் வரை தயாரிப்பதற்கு ஆண்டிமனி பயன்படுகிறது. “,