“மலேசியாவில் ஒரு வீட்டின் கூரை வழியாக 80 கிலோ எடை கொண்ட மலைப்பாம்பு விழுந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

அங்குள்ள காமுண்டிங்க் நகரில் ஒரு வீட்டில் திடீரென கூரையை பிய்த்து கொண்டு 5 அடி நீளம் கொண்ட பெரிய மலைப்பாம்பு வீட்டில் இருந்த சோபா மீது விழுந்தது. அப்போது வீட்டில் இருந்த உறுப்பினர்கள் சில நொடிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

அந்த மலைப்பாம்பு சுமார் 80 கிலோ எடை கொண்டதாக இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் சிவில் பாதுகாப்பு நிறுவனத்தினர் அங்கு வந்து வீட்டு கூரையின் ஒரு பகுதியை இடித்து சோபாவில் கிடந்த பாம்பை மீட்டு வன விலங்கு மற்றும் தேசிய பூங்கா துறையினரிடம் ஒப்படைத்தனர்.

வீடியோவை பார்த்த பயனர்கள் சிலர் நகைச்சுவையான கருத்துக்களை பதிவிட்டனர்.

Share.
Leave A Reply

Exit mobile version