கரீபிய தீவுகளில் அமைந்துள்ள ஒரு நாடு ஹைதி. இந்த நாட்டின் தலைநகராக – போர்ட்-ஓ-பிரின்ஸ் உள்ளது. போர்ட்-ஓ-பிரின்ஸ் இல் Cite Soleil என்ற துறைமுக பகுதி மக்கள்தொகை மிகுந்த குடிசைப் பகுதியாகும்.

ஹைதியின் மிகவும் ஏழ்மையான மற்றும் வன்முறை நிறைந்த பகுதிகளில் ஒன்றாகும். இங்கு பல கும்பல்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதில் வார்ஃப் ஜெர்மி என்ற கும்பலை சேர்ந்த தலைவன் மோனல் மிகானோ பெலிக்ஸ் என்பவன் இந்த கொலைகளுக்கு உத்தரவிட்டுள்ளான்.

பெலிக்ஸ் உடைய மகன் சமீபத்தில் நோய்வாய்ப்பட்ட நிலையில் வெளியிடத்தில் உள்ள தேவாலயத்தில் ஒரு பாதிரியாரை அணுகியுள்ளான். பெலிக்ஸ் மகனுக்கு அப்பகுதியில் உள்ள சூனியக்காரர்கள் [voodoo practitioners] பில்லி சூனியம் [voodoo] வைத்துள்ளதாகக் கூறி அவர்களைக் கொல்ல பெலிக்ஸுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.

அதைக் கேட்டு ஆத்திரமடைந்த பெலிக்ஸ் அப்பகுதியில் உள்ள சூனியக்காரர்கள் அனைவரையும் கொலை செய்ய தனது கும்பலுக்கு உத்தரவிட்டுள்ளான். அதன்படி அந்த கும்பல் ஆண்கள் பெண்கள் என சுமார் 200 பேர் வரை கத்தியால் கொன்று குவித்துள்ளனர்.

Cité Soleil இன் Wharf Jérémie பகுதியில் டிசம்பர் 6-8 க்கு இடையி ல் 127 வயதான ஆண்கள் மற்றும் பெண்கள் உட்படக் குறைந்தது 184 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஐநா தனது அறிக்கையில் குறிப்பிட்டு இந்த படுகொலைகளுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஹைதி அரசும் நேற்று இந்த படுகொலைகளை உறுதிசெய்துள்ளது.மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர் ஆணையர் வோல்கர் டர்க், கும்பல் கட்டுப்பாட்டில் உள்ள பிராந்தியத்தில் அதிகரித்து வரும் இதுபோன்ற வன்முறைகள் கவலையளிப்பதாகத் தெரிவித்தார்.

100 க்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டதாகவும், அவர்களின் உடல்கள் சிதைக்கப்பட்டு தெருவில் எரிக்கப்பட்டதாகவும் அப்பகுதியிலிருந்து நம்பத்தகுந்த ஆதாரங்கள் கிடைத்துள்ளன என்று அமைதி மற்றும் மேம்பாட்டுக்கான கூட்டுறவு (CPD) அமைப்பு தெரிவித்துள்ளது.

கொலைக்கு உத்தரவிட்ட வார்ஃப் ஜெர்மி கும்பலுக்கு தலைமை தாங்கும் பெலிக்ஸ் தங்கள் நாட்டுக்குள் நுழைய அண்டை நாடான டொமினிகன் குடியரசு கடந்த 2022 இல் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version