இன்று (17) காலை புத்தகயாவிற்கு சென்ற ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, சித்தார்த்த இளவரசர் ஞானம் பெற்ற இடத்தில் அமைந்துள்ள மகா விகாரை மற்றும் ஸ்ரீ மகா போதி என்பவற்றைத் தரிசித்து ஆசி பெற்றுக் கொண்டார்.

இதன்போது, இந்திய மகாபோதி சங்கத்தின் பொதுச் செயலாளர் பெலவத்தே சீவலி தேரர் மற்றும் சாரநாத் மையத்தின் விகாராதிபதி ரத்மல்வல சுமித்தானந்த தேரர் ஆகியோர் ஜனாதிபதிக்கு ஆசிர்வாதம் வழங்கினர்.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ ஆகியோரும் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.

 

Share.
Leave A Reply

Exit mobile version