யாழ்ப்பாணத்தில் துவிச்சக்கர வண்டி களவில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 12 துவிச்சக்கர வண்டிகளும் மீட்கப்பட்டுள்ளன.

திருட்டு சம்பவம் தொடர்பில் வடமராட்சி பகுதியை சேர்ந்த 23 வயதான இளைஞன் ஒருவரை நேற்றைய தினம் சனிக்கிழமை மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறை புலனாய்வாளர்கள் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

அதன் போது வடமராட்சியின் பல்வேறு பகுதிகளில் துவிச்சக்கர வண்டிகளை திருடியதாக கைது செய்யப்பட்ட நபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் , களவாடப்பட்ட 12 துவிச்சக்கர வண்டிகளையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர்

Share.
Leave A Reply

Exit mobile version