– உபதேசம் ஊருக்கு மட்டுமல்ல; நிரூபித்த அநுர குமார

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் தனது தாயாரை கடந்த வெள்ளிக்கிழமை (20) இரவு பார்வையிட்டதோடு, அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.


எவருக்கும் தெரிவிக்காமல் ஜனாதிபதி தனது தாயாரைப் பார்க்கச் சென்றதாகவும், அவரது திடீர் வருகையை வைத்தியசாலை ஊழியர்கள் அறிந்திருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதியின் தாயார் கடந்த ஒரு வார காலமாக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
தான் ஜனாதிபதியாக இருந்தும் , அனைத்து வசதிகளும் இருந்தும் சாதாரண மக்களை போன்று அரச வைத்தியசாலையை நம்பி தனது தாயை அனுமதி செய்து இருப்பது இலங்கையில் பாரிய மாற்றம் ஒன்றின் ஆரம்ப புள்ளியாகும்.
Share.
Leave A Reply

Exit mobile version