இலங்கைக்கு கடந்த வாரம் படகில் வந்துள்ள மியன்மாரின் ரோகிங்யா புகலிடக்கோரிக்கையாளர்களிற்கு ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க மனிதாபிமான புகலிடத்தை வழங்கவேண்டும் என 47 சிவில்சமூக அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் இதனை தெரிவித்துள்ள அந்த அமைப்புகள் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.
டிசம்பர் 19 2024ம் திகதியன்று100க்கும் மேற்பட்ட ரோகிங்யா அகதிகளுடன் படகொன்று முல்லைத்தீவில் உள்ள முள்ளிவாய்க்காலை நோக்கி வந்தது.
அன்று மாலை இலங்கை கடற்படையினர் திருகோணமலை துறைமுகத்தில் உள்ள அஸ்ரவ் இறங்குதுறைக்கு அந்த படகை பாதுகாப்பாக அழைத்துச்சென்றனர்.டிசம்பர் 20 திகதி அவர்கள் பாதுகாப்பாக படகிலிருந்து தரையிறங்கினார்கள்.
அதன் பின்னர் அவர்கள் திருகோணமலை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்கள்,ரோகிங்யா அகதிகள் தாங்கள் அடைக்கலம் கோரும் நோக்கத்துடனேயே இலங்கை வந்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
அவர்கள் மூன்று படகுகளில் புறப்பட்டுள்ளனர் ஆனால் ஒரு படகு மாத்திரமே115 பேருடன் இலங்கையை வந்தடைந்துள்ளது.இந்த படகில் 103 புகலிடக்கோரிக்;கையாளர்களும் அவர்களை இலங்கைக்கு அழைத்துவந்த 12 பேரும் இருந்துள்ளனர்.
புகலிடக்கோரிக்கையாளர்களை இலங்கைக்கு அழைத்துவந்தவர்களை தடுப்புக்காவலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதிமன்றம் ஏனையவர்களை மிரிஹான தடுப்பு முகாமிற்கு அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளது.
குடிவரவுதுறையினர் அவர்களை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லாததால் அவர்களை மிரிஹான புனர்வாழ்வு முகாமிற்கு அனுப்புவதற்கனா ஆரம்பகட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.23ம் திகதி அவர்களை மிரிஹான புனர்வாழ்வு முகாமிற்கு அனுப்பவிருந்ததாகவும் பின்னர் கேப்பாபிலவு விமானப்படை முகாமிற்கு அவர்களை அனுப்பியுள்ளதாகவும் நாங்கள் அறிகின்றோம்.
புகலிடக்கோரிக்கையாளர்கள் இலங்கையில் காலடிஎடுத்துவைப்பதற்கும் தங்கியிருப்பதற்கும் அனுமதித்ததும்,கடற்படையினர் அவசரசேவை பிரிவினர் முல்லைத்தீவு திருகோணமலையை சேர்ந்த பொதுமக்கள் அரசசார்பற்ற அமைப்புகளின் உடனடி உதவிகளையும் பாராட்டவேண்டும்.
எனினும் அவர்கள் கடலில் நீண்டநேரம் வைக்கப்பட்டிருந்தமை குறித்தும்,அவர்கள் தங்கவைக்கப்படவிருந்த இடங்கள் அடிக்கடி மாற்றப்பட்டமை குறித்தும் அவர்கள் தடுத்துவைக்கப்படுவார்கள் என்பது குறித்தும் நாங்கள் கரிசனை கொண்டுள்ளோம்.
இந்த அகதிகளின் கதைகள் மனதை வருத்துபவவை.அவர்கள் மியன்மாரிலிருந்து மூன்று படகுகளில் இலங்கைக்கு புறப்பட்டுள்ளனர் எனினும் ஒரு படகு மாத்திரமே இலங்கையை வந்தடைந்துள்ளது.
இந்த படகு பயணத்தின் போது பட்டினி காரணமாக நான்கு சிறுவர்கள் உட்பட ஆறுபேர் உயிரிழந்துள்ளனர்.அவர்களின் உடல்களை கடலிற்குள் வீசியுள்ளனர்.