பிலியந்தலை பிரதேசத்தில் தந்தையால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மகள் கொலை செய்யப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் கடந்த 26 ஆம் திகதி பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

சந்தேக நபரான தந்தை, தனது மனைவி வேறொரு நபருடன் தகாத உறவில் ஈடுபட்டிருப்பதாக சந்தேகமடைந்து மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.

காயமடைந்த மனைவியும் இரண்டு பிள்ளைகளும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் 13 வயதுடைய இளைய மகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தை அடுத்து, சந்தேக நபர் தனது வீட்டின் அறையில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றுள்ள நிலையில் அது தோல்வியடைந்ததையடுத்து பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரை கைது செய்வது தொடர்பில் பிலியந்தலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version