div id=”free-article”>
20ம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்தில் ஈரானில் எண்ணெய் வளம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட காலம் முதல் ஈரான் குறித்த ஆர்வம் மேற்குலகில் அதிகரித்து வந்துள்ளது.
1950களின் ஆரம்பத்தில் ஈரானின் எண்ணெய் வளத்தை பிரிட்டனின் நிறுவனங்களே பெருமளவிற்கு கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தன.அக்காலப்பகுதியிலேயே ஈரானின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட முகமட் மொசெடெக் ஈரானின் எண்ணெய் வளத்தை தேசியமயமாக்கப்போவதாக அறிவித்தார்.
பனிப்போர் யுத்தகாலத்தில் ஈரானின் புதிய ஜனாதிபதி ஈரானை சோவியத்யூனியனிற்கு நெருக்கமாக்குகின்றார் என அஞ்சிய சிஐஏயும் பிரிட்டனின் புலனாய்வு பிரிவினரும் இணைந்து முகமட் மொசெடெக்கை பதவியிலிருந்து அகற்றியதுடன்இமேற்குலகிற்கு சாதகமான ஜனாதிபதியை பதவியில் அமர்த்தினர்.
அந்த ஜனாதிபதியின் பெயர் முகமது ரேசா
ஷா பஹ்லவி . இவர் 1953ம் ஆண்டு ஈரான் ஜனாதிபதியாக பதவியேற்றார்.
ஷாவின் மேற்குலசார்பு – கம்யுனிஸ்ட் எதிர்ப்பு அரசாங்கம் ஈரானின் எண்ணெய் வளங்களில் 80 வீதமானவற்றை மீள அமெரிக்காவிடமும் பிரிட்டனிடமும் வழங்கியது.
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களின் உதவியுடன் ஷாவும் அவரது இரகசிய பொலிஸ் பிரிவான சவாக்கும் அரசியல் எதிராளிகளிற்கு எதிராக ஈவிரக்கமற்ற வன்முறையை கட்டவிழ்த்துவிட்டனர்.
1963 இல் இஸ்லாமிய மதகுருவான ஆயத்தொல்லா ருகொல்லா கொமேனியின் தலைமையில் இடம்பெற்ற மக்கள் எழுச்சி ஈவிரக்கமற்ற விதத்தில் ஒடுக்கப்பட்டது.
இறுதியாக 1979 இல் ஈரானில் பெரும்மக்கள் எழுச்சி உருவானது.அது ஷாவை அதிகாரத்திலிருந்து ஆட்சியிலிருந்து அகற்றியது. கொமேனி இஸ்லாமிய ஆட்சியாளர்களை அதிகாரத்தில் அமர்த்தினார்.
14 வருடங்கள் நாடு கடந்த நிலையில் வாழ்ந்த கொமேனி மீண்டும் ஈரான் திரும்பி அதன் அரசியல் ஆன்மீக தலைவரானார்.
இக்காலப்பகுதியில் அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் ஈரானின் பதவி கவிழ்க்கப்பட்ட ஆட்சியாளர்
ஷாவிற்கு அடைக்கலம் அளிக்க மறுத்தார். அவரது ஆலோசகர்கள் ஷாவிற்கு அடைக்கலம் அளிக்கவேண்டும் என ஆலோசனை வழங்கியபோதிலும் ஜிம்மி கார்ட்டர் அதனை ஏற்க மறுத்தார்.
அந்த வருடம் ஒக்டோபரில் மெக்சிக்கோவில் தங்கியுள்ள ஷா புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியானது.
கார்ட்டர் தயக்கத்துடன் ஷா அமெரிக்கா வருவதற்கு அனுமதியளித்தார்.மனிதாபிமான அடிப்படையில் சிகிச்சைக்காக இந்த அனுமதி வழங்கப்பட்டது.
அமெரிக்காவின் இந்த முடிவிற்கு ஈரானில் கடும் எதிர்ப்பு உருவானது.
கடும் அமெரிக்க எதிர்ப்பு உணர்வு இறுதியில் ஈரானில் உள்ள அமெரிக்க தூதரகத்தை மாணவர்கள் முற்றுகையிடும் நிலையை தோற்றுவித்தது.’
நவம்பர் 4ம் திகதி அமெரிக்க தூதரகத்தை ஈரான் மாணவர்கள் முற்றுகையிட்டனர்.
அமெரிக்க தூதரக முற்றுகை கிட்டத்தட்ட அமெரிக்காவிற்கும் ஈரானிற்கும் யுத்தம் மூளக்கூடிய சூழ்நிலையை உருவாக்கியது.ஜிம்மி கார்ட்டரின் ஜனாதிபதி பதவிக்கும் முடிவு கட்டியது.
மாணவர்கள்சிறிது நாட்களின் பின்னர் 66பணயக்கைதிகளில் 13 பேரை விடுதலை செய்தனர்.இராஜதந்திரிகளும் தூதரக பணியாளர்களுமே விடுதலை செய்யப்பட்டனர். விடுதலைசெய்யப்பட்டவர்களில் அனேகமானவர்கள் பெண்கள்ஆபிரிக்க அமெரிக்கர்கள்அமெரிக்க பிரஜைகள் அல்லாதவர்கள்.
ஆயத்தொல்லா கொமேனியின் கூற்றுப்படி இவர்களும் அமெரிக்க அரசின் ஒடுக்குமுறைக்குள்ளானவர்கள்
நோய்வாய்ப்பட்ட மற்றுமொரு கைதியை மாணவர்கள் பின்னர் விடுதலை செய்த போதிலும்இ1980இன் கோடைகாலம் வரை ஏனையவர்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.
ஜனாதிபதி கார்ட்டர் அமெரிக்க பணயக்கைதிகளை விடுதலை செய்வதே தனது நிர்வாகத்தின் மிக முன்னுரிமைக்குரிய விடயம் என அறிவித்தார்.எனினும் இராஜதந்தி முயற்சிகள் பொருளாதார தடைகள் மூலம் ஆயத்தொல்லா கொமேனியின் ஆதரவாளர்களின் மனதை மாற்றமுடியவில்லை.
1980 ஏப்பிரலில் பணயக்கைதிகளை விடுதலை செய்வதற்காக அமெரிக்கா தனது சிறப்பு படையினரை பயன்படுத்தி மேற்கொண்ட நடவடிக்கை தோல்வியில்முடிவடைந்தது.ஹெலிக்கொப்டர் போக்குவரத்து விமானத்துடன் மோதி விழுந்ததில் 8 படையினர் கொல்லப்பட்டனர்.
தொடர்ச்சியான ஊடக கவனம்இ இந்த விவகாரத்திற்கு தீர்வை காண்பதில் கார்ட்டருக்கு ஏற்பட்ட தோல்விகளிற்கு மத்தியில் 1980 ஜனாதிபதி தேர்தலில் இந்த விவகாரம் முக்கியத்துவம் பெற்றது.
ஜனநாய கட்சியின் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டரின் அதிகரித்து வந்த பலவீனங்கள் குடியரசுக்கட்சியின் வேட்பாளர் ரொனால்ட் ரீகனிற்கு சாதகமாக அமைந்தன.நவம்பரில் ரீகன் பெரும் வெற்றிபெற்றார்.
அதேவேளை தூதரகத்திற்குள் சிக்குண்டவர்கள் நிச்சயமற்ற தன்மை அச்சத்தின் மத்தியில் வாழவேண்டிய நிலை காணப்பட்டது.அவர்கள் நீண்டகாலம் தடுத்துவைக்கப்பட்டனர்இதாக்கப்பட்டனர் இ உடல் பாதிப்பு மரண தண்டனை குறித்த அச்சுறுத்தலிற்குள்ளாகினர்.
பல மாத பேச்சுவார்த்தைகளின் பின்னர் 1980 டிசம்பரில் பணயக்கைதிகளை விடுதலை தொடர்பில் ஈரானிற்கும் அமெரிக்காவிற்கும்இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டது.
எனினும் 1981 ஜனவரி 20 ம் திகதி ரொனால்ட் ரீகன் தனது பதவிப்பிரமாண உரையை ஆற்றும்வரை பணயக்கைதிகளை விடுதலை செய்யாமல் வைத்திருந்த ஈரானியர்கள் கார்ட்டர் குறித்த தங்கள் கடும் சீற்றத்தை வெளிப்படுத்தினார்கள்.
https://www.history.com/
தமிழில் ரஜீபன்
US President Jimmy Carter, Vice President Walter Mondale, Secretary of State Cyrus Vance, and Secretary of Defense Harold Brown