யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஊரெழு கிழக்கு பகுதியில் திடீரென மயங்கிய இளங்குடும்பஸ்தர் ஒருவர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் அதே இடத்தை சேர்ந்த கிருபரஞ்சன் (வயது- 38) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.
நேற்று முன்தினம் திங்கட்கிழமை (30) காலை தனியார் கல்வியில் நிலையத்திற்கு மகளை ஏற்றுவதற்காக மோட்டார் சைக்கிள் எடுக்கச் சென்றவர் திடீரென ஓடி வந்து மயங்கி விழுந்துள்ளார்.
இதனை அடுத்து உடனடியாக யாழ். போதனா வைத்தியாசாலைக்கு கொண்டு சென்ற நிலை அங்கு உயிரிழந்துள்ளார். இம் மரணம் தொடர்பில் நேற்று செவ்வாய்க்கிழமை (31) யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணை மேற்கொண்டு உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.