கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணயக் கைதிகளாக காஸா முனைக்கு ஹமாஸ் அமைப்பினர் கடத்திச் சென்றனர். இவர்களை மீட்கும் முயற்சியில், இஸ்ரேல் போர் தொடுத்தது. ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஹிஸ்புல்லாவும் இயங்கி வந்தது.

இதற்கிடையே, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய இருநாடுகள் எடுத்த முயற்சியின் பலனாக இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இடையே, கடந்த ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி போர் நிறுத்தம் ஏற்பட்டது. இஸ்ரேல் மற்றும் லெபனான் ஹிஸ்புல்லா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டிய நிலையிலும், இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் முடிவுக்கு வரவில்லை. இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் போரில் உயிரிழக்கும் வீரர்கள் ஒருபுறமிருக்க, மறுபுறம் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு உயிரை மாய்த்துக் கொள்ளும் இஸ்ரேல் ராணுவ வீரர்களின் விகிதம் அதிகரித்து இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் 38 பேர் வரை உயிரை மாய்த்துக்கொண்டு இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டில் 14 பேரும் 2021ஆம் ஆண்டில் 11 பேரும் உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில், இந்த எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. இது 2023இல் 17 ஆகவும், 2024இல் 21 ஆகவும் உயர்ந்துள்ளது. 2023ஆம் ஆண்டில் மட்டும், போர், விபத்துக்கள் மற்றும் நோய்கள் உள்ளிட்ட காரணங்களால் மொத்தம் 558 வீரர்கள் உயிரிழந்தனர்.

மேலும் சமீபத்திய காஸா போர் நடவடிக்கை வீரர்களிடையே கடுமையான மனநல கவலைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இஸ்ரேல் பாதுகாப்புப் படையில் (IDF) மனநல பிரச்னைகள் அதிகரித்து வருவதைக் குறிக்கும் பரந்த போக்கை இந்த அறிக்கை எடுத்துக்காட்டுவதாகக் கூறப்படுகிறது.

2023ஆம் ஆண்டு அக்டோபரில் போர் தொடங்கப்பட்டதில் இருந்து 3,900க்கும் மேற்பட்ட மனநல அழைப்புகளை அந்நாட்டு ராணுவ வீரர்கள் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, 24/7 மனநல ஹாட்லைன் போன்ற நடவடிக்கைகளை IDF செயல்படுத்தியதாகவும், கூடுதலாக, 800 மனநல அதிகாரிகளை ராணுவம் நியமித்ததாகவும் கூறப்படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version