இலங்கை தமிழரசுக் கட்­சியின் மத்­திய குழு கூட்டம் நடந்த 28 ஆம் திகதி இடம்­பெற்ற போது, பல்­வேறு குழப்­பங்­க­ளுக்கு மத்­தியில் சில தீர்­மா­னங்கள் எடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

கட்­சியின் தலை­வ­ரான மாவை சேனா­தி­ராஜா அந்தப் பத­வியில் இருந்து எப்­ப­டியோ அகற்­றப்­பட்டு, பதில் தலை­வ­ராக சி.வி.கே. சிவ­ஞானம் செயற்­ப­டுவார் என அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

அதே­வேளை, மாவை சேனா­தி­ராஜா, கட்­சியின் அர­சியல் குழுவின் தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கிறார்.

அதே­போல, கடந்த தேர்­தல்­களில் கட்­சிக்கு எதி­ராக, கட்­சியின் தீர்­மா­னங்­க­ளுக்கு எதி­ராக, தேர்­தல்­களில் போட்­டி­யிட்­ட­வர்கள் அல்­லது பிர­சாரம் செய்­த­வர்கள் கட்­சியில் இருந்து நீக்­கப்­ப­டு­வ­தா­கவும் அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

அப்­படி நீக்­கப்­பட்­ட­வர்­களில், ஜனா­தி­பதி தேர்­தலில் பொது­வேட்­பா­ள­ராக போட்­டி­யிட்ட பா.அரி­ய­நேத்­தி­ரனும் ஒருவர்.

ஆனால், அவ­ருக்கு ஆத­ரவு வழங்­கிய, அல்­லது அவ­ருக்­காக பிரச்­சாரம் செய்த பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான சிறிதரன் மீதோ, சிறிநேசன் மீதோ எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­ட­வில்லை.

கட்­சிக்குள் மாவை சேனா­தி­ரா­ஜா­வுக்கு ஆத­ர­வா­கவும், பொதுச்­செ­ய­லாளர் மருத்­துவர் சத்­தி­ய­லிங்­கத்­துக்கு எதி­ரா­கவும், கருத்­துக்­களை வெளி­யிட்டு வந்த முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மருத்­துவர் சிவ­மோகன் கூட கட்­சியில் இருந்து இடை­நி­றுத்­தப்­பட்­டி­ருக்­கிறார்.

ஆயினும், 2023இல் உள்­ளூ­ராட்சி தேர்தல் அறி­விக்­கப்­பட்ட போது, தமி­ழ­ரசு கட்­சியின் கிளி­நொச்சி வேட்­பா­ளர்கள் அனை­வ­ரையும் சிறித­ரனே தெரிவு செய்த நிலையில், அவர்­களை தோற்­க­டிப்­ப­தற்­காக, தமி­ழ­ரசு கட்­சியின் இன்­னொரு அணி சுயேட்­சை­யாக கள­மி­றக்­கப்­பட்­டது. அந்த தேர்தல் நடை­பெ­றாமல் போனதால், அப்­பொ­ழுது அந்த பலப்­பரீட்சை நடக்­க­வில்லை.

அப்­போது சுயேட்­சை­யாக கள­மி­றங்­கி­ய­வர்­களின் பின்னால், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்த சுமந்­திரன் இருந்தார் என்ற குற்­றச்­சாட்­டுகள் இருந்­தன.

ஆயினும் வண்டிச் சின்­னத்தில் உள்­ளூ­ராட்சி தேர்­தலில் கள­மி­றங்­கிய வேட்­பா­ளர்கள் எவரும் தமி­ழ­ரசுக் கட்­சி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்­ட­தாக தெரி­ய­வில்லை.

அவர்கள் சுமந்­திரன் ஆத­ர­வா­ளர்கள் என்­பதால், அவ­ரா­லேயே கள­ம­றக்­கப்­பட்­டனர் என்­ப­தா­லேயே அவ்­வாறு நீக்­கப்­ப­ட­வில்லை என்ற கருத்­துக்கள் உள்­ளன.

தமி­ழ­ரசு கட்­சியின் மத்­திய குழுக் கூட்­டத்தில் எடுக்­கப்­பட்ட இந்த முடி­வுகள், அந்த கட்­சியின் சொந்த முடி­வுகள். அதில் யாரும் தலை­யிட முடி­யாது. அவர்கள் விரும்­பிய முடிவை எடுக்­கலாம், எடுக்­காமல் போகலாம்.

ஆனால், அந்தக் கட்சி மக்­களின் அங்­கீ­கா­ரத்தை பெறா­த­வரை தான் அப்­படிக் கூறிக் கொள்­ளலாம்.

மக்­களின் அங்­கீ­கா­ரத்தை பெற்ற ஒரு கட்சி, தங்­களை ஜன­நா­யகம் நிரம்­பிய கட்சி என்று கூறு­கின்ற ஒரு கட்­சியின் தலை­வர்கள், இதனை உட்­கட்சி விவ­காரம் என கூற முடி­யாது.

அண்­மையில் தமி­ழ­கத்தில் பாட்­டாளி மக்கள் கட்­சியின் மத்­திய குழு கூட்­டத்தில் ஒரு சம்­பவம் நடந்­தது. அந்த கட்­சியின் நிறு­வு­ந­ரான மருத்­துவர் ராமதாஸ் இளைஞர் அணி தலை­வ­ராக தனது மகள் வழிப் பேரனை நிய­மிக்­கிறார். அதனை அவர் அறி­வித்த போது மகன் அன்­பு­மணி மேடையில் இருந்து கொண்டு அதற்கு எதிர்ப்பு தெரி­விக்­கிறார்.

அப்­போது ராமதாஸ் “இது நான் உரு­வாக்­கிய கட்சி, நான் சொல்­வதை தான் கேட்க வேண்டும், கேட்க முடி­யா­த­வர்கள் வெளியே போகலாம்” என்று மகன் அன்­பு­ம­ணியை பார்த்து சொல்­கிறார்.

இந்த வாக்­கு­வாதம் அர­சி­யலில் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்த நிலையில், இரு­வரும் சம­ரசம் செய்து கொண்­டி­ருக்­கி­றார்கள்.

ராமதாஸ் இன்­னமும் இப்­ப­டிப்­பட்ட ஒரு மனோ­நி­லையில் இருப்­ப­தால்தான், அந்த கட்­சி­யினால் இன்­னமும் குறிப்­பி­டத்­தக்க ஆச­னங்­களை கூட கைப்­பற்ற முடி­யாத நிலையில் இருக்­கி­றது.

அந்த கூட்­டத்தில் ராமதாஸ், இது தனது கட்சி என்றும், தான் சொல்­வதை கேட்க முடி­யா­த­வர்கள் வெளியே போங்கள் என கூறு­வ­தற்கு உரித்து உடை­ய­வ­ராக இருக்­கலாம். ஏனென்றால் அவர் அதை சொந்தக் கட்­சி­யா­கவே நடத்­து­கிறார்.

ஆனால், தமி­ழ­ரசுக் கட்சி அப்­படி யாரு­டைய சொந்தக் கட்­சியும் அல்ல. அப்­படிக் கூறினால், இந்த கட்­சியை உரு­வாக்­கிய எஸ்.ஜே.வி. செல்­வ­நா­யகம் கூட அதனை ஏற்­றுக்­கொள்­ள­மாட்டார்.

ஏனென்றால் அவ­ருடன் கூட சேர்ந்து, இந்த கட்­சியை உரு­வாக்­கி­ய­வர்­களில் நாக­நாதன், வன்­னி­ய­சிங்கம் போன்­ற­வர்­களும் இருந்­தனர்.

இலங்கை தமி­ழ­ரசுக் கட்சி தங்­களை அதி­க­பட்ச ஜன­நா­யகம் கொண்ட கட்சி என அடிக்­கடி சொல்லிக் கொள்­வது உண்டு. குறிப்­பாக இரா.சம்­பந்தன் உயி­ருடன் இருந்த கால­கட்­டத்தில், அதனை பல­முறை கூறி­யி­ருக்­கிறார்.

இது ஜன­நா­யகம் நிரம்­பிய கட்சி, இதில் யாரும் எப்­ப­டியும் கருத்து தெரி­விப்­ப­தற்கு உரிமை உண்டு என அவர் பல சந்­தர்ப்­பங்­களில் குறிப்­பிட்­டி­ருக்­கிறார்

கட்­சிக்கு எதி­ராக வழக்கு தாக்கல் செய்­த­வர்­களும் கூட, மத்­திய குழுவில் இருக்­கி­றார்கள் என்றும் கூட பகி­ரங்­க­மாக சிலர் கூறி­யி­ருந்­தனர்.

ஆனால், இப்­பொ­ழுது அவ்­வா­றான மாற்றுக் கருத்­துக்­களை வெளி­யிட்­ட­வர்கள், கட்­சி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள். மாற்று சிந்­தனை கொண்­ட­வர்கள் கொஞ்சம் கொஞ்­ச­மாக களை எடுக்­கப்­ப­டு­கின்ற நிலை உரு­வாகி இருக்­கி­றது.

கட்சி இப்­பொ­ழுது ஜன­நா­யக பாதையில் இருந்து விலகி, கொஞ்சம் கொஞ்­ச­மாக அதி­கா­ரத்­துவ பாதையை நோக்கி நகரத் தொடங்கி இருக்­கி­றது என்­பதை அண்­மைய மத்­திய குழுக் கூட்டம் நிரூ­பித்­தி­ருக்­கி­றது.

தமி­ழ­ரசுக் கட்­சியைப் பொறுத்­த­வ­ரையில் தங்­களை தமிழ் மக்­களின் பிர­தி­நி­திகள் என்று கூறிக் கொள்­கி­றது.

தமிழ் மக்­களின் ஆணையை பெற்ற கட்சி என்று கூறிக் கொள்­கி­றது. தேர்­தலில் அந்த கட்சி பெற்றுக் கொண்ட ஆச­னங்கள் அதனை நிரூ­பித்­தி­ருக்­கி­றது.

ஆனால், மக்­களின் ஆணையைப் பெற்ற கட்சி, மக்­க­ளுக்கு பொறுப்­புக்­கூற வேண்­டிய கடப்­பாட்டை கொண்­டி­ருக்­கி­றது என்­பதை மறுக்க முடி­யாது.

கட்­சிக்குள் சில முடி­வு­க­ளுக்கு எதிர்ப்பு தெரி­விப்­ப­வர்கள், சில­ருக்கு எதி­ராக நடந்து கொள்­ப­வர்கள், ஓரங்­கட்டி ஒதுக்கி தள்­ளப்­ப­டு­வது இப்­பொ­ழுது வழ­மை­யாக மாறி இருக்­கி­றது.

இது, ஜன­நா­யக சூழல் கட்­சிக்குள் கொஞ்சம் கொஞ்­ச­மாக அருகி வரு­வதை காட்­டு­கி­றது.

இவ்­வா­றான நிலையை, கட்­சிக்கு வாக்­க­ளித்­த­வர்கள் தட்டிக் கேட்க முடி­யாது என கூற­மு­டி­யாது. ஏனென்றால், அவர்கள் கட்­சிக்கு வாக்­க­ளித்­தி­ருக்­கி­றார்கள்.

அவர்கள் எந்­த­வொரு தனி நப­ருக்கும் வாக்­க­ளிக்­க­வில்லை. தமி­ழ­ரசுக் கட்­சியின் பெய­ருக்கும் சின்­னத்­திற்கும் தான், வாக்­க­ளித்­தனர்.

ஆக, கட்சி மக்­க­ளுக்கு பொறுப்பு கூறும் கடப்­பாட்டை கொண்­டுள்­ளது. கட்­சி­யிடம் கேள்வி கேட்கும் உரிமை மக்­க­ளுக்கு இருக்­கி­றது.

அந்த வகையில் கட்­சியின் தன்­னிச்­சை­யான போக்­குகள் தொடர்­பாக மக்கள் மத்­தியில் எழுப்­பப்­படும் கேள்­வி­க­ளுக்கு தமிழ­ரசுக் கட்சி பதி­ல­ளித்தே ஆக வேண்டும்.

பாரா­ளு­மன்ற தேர்­தலில் தமிழர் தரப்பு தனித்­த­னி­யாக போட்­டி­யிட்­டதன் விளைவை நன்­றா­கவே அறு­வடை செய்­தது.

அதற்கு பின்னர் இனி இணைந்து செயல்­ப­டுவோம் என பல்­வேறு தரப்­பு­களும் ஒரு இணக்­கப்­பாட்­டுக்கு வரு­கின்ற சூழலில், தமி­ழ­ரசு கட்சி தமது கட்­சிக்குள் முன்­னெ­டுக்­கின்ற களை­யெ­டுப்பு நட­வ­டிக்­கைகள், இப்­போ­தைய சூழலை கெடுத்து விடும் ஆபத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

தமி­ழ­ரசுக் கட்சி ஒரு தரப்பை பலப்­ப­டுத்தும் நோக்கில் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கி­றது என்­பதை தெளி­வாக உணர முடி­கி­றது.

இவ்­வா­றான நிலை, தமிழ் தேசிய அர­சியல் பரப்பில் இணைந்து செயல்­படும் முயற்­சி­க­ளுக்கு இடை­யூ­றாக அமைந்து விடும் என்ற கருத்து, கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­ப­லத்­தி­னாலும் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது.

அவர் கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் தமிழரசுக் கட்சியை புறந்தள்ளி செயல்பட முடியாது என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார்.

ஆனாலும் அந்த கட்சியின் போக்கு குறித்து அவர் வெளியிட்டுள்ள கவலை நியாயமானது.

ஏனென்றால் வெண்ணெய் திரளும் நேரத்தில் தாழியை உடைத்த கதையாக அமைந்து விடுமோ என்ற கரிசனை அவரிடம் தென்படுகிறது.

தமிழரசுக் கட்சியில் உருவாகி இருக்கும் நெருக்கடிகள் தீர்க்கப்பட்டால்தான் தமிழர் பிரச்சினைக்கான தீர்வைத் ஒருமித்த கருத்துடன் – ஒருமித்த நிலைப்பாட்டுடன் வலுவான ஒரு தரப்பாக முன்னெடுக்கக் கூடிய சாத்தியம் ஏற்படும்.

ஆனால், தமிழரசுக் கட்சி உள்கட்சி மோதல்களையும் முரண்பாடுகளையும் நீட்டிக்கொண்டே செல்வது, தமிழர் பிரச்சினையை தீர்ப்பதற்கான முயற்சிகளைத் தட்டிக் கழிப்பதற்கான வாய்ப்புகளையே சிங்கள ஆட்சியாளர்களுக்கு விட்டு வைக்கப் போகிறது.

-கபில்-

Share.
Leave A Reply

Exit mobile version