சென்னை: தில் ராஜு தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் நள்ளிரவு 1 மணிக்கு சிறப்புக் காட்சியுடன் வெளியாகி உலகமெங்கும் வெற்றிநடை போட்டு வருகிறது.

இந்தியன் 2 படம் அளவுக்கு இந்த படம் ட்ரோல் மெட்டீரியலாக மாறாமல் போனதே படத்துக்கு மிகப்பெரிய பாசிட்டிவாகவும் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தவும் வழிவகை செய்துள்ளது.

தமிழ் சினிமா ரசிகர்களும் ஷங்கரின் கேம் சேஞ்சர் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.

புதுசா எதுவும் இல்லை என்றாலும் மக்களுக்கான நல்ல படமாகவும் போரடிக்காத வகையில் இருக்கும் மேக்கிங் மற்றும் ராம் சரணின் துடிப்பான நடிப்பு படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறது என்று தான் பலரும் படத்தை பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், நிச்சயம் இந்த பொங்கல் விடுமுறை 10 நாள் கலெக்‌ஷனை கேம் சேஞ்சர் தாராளமாக தட்டித்தூக்கும் என பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

படத்தின் பட்ஜெட், ராம் சரண், ஷங்கர், கியாரா அத்வானி உள்ளிட்ட பிரபலங்களின் சம்பளம் மற்றும் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்த கணிப்புகளை முழுமையாக இங்கே பார்க்கலாம் வாங்க..

எகிறிய கேம் சேஞ்சர் பட்ஜெட்: 300 கோடி பட்ஜெட்டில் ஆரம்பிக்கப்பட்ட கேம் சேஞ்சர் திரைப்படம் 3 வருடங்கள் மேக்கிங்கிற்காக எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், அதன் பட்ஜெட் மட்டும் 450 கோடியாக அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

எஸ்.ஜே. சூர்யா பேட்டி ஒன்றில் பேசும் போது 400 முதல் 500 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தார்.

படத்தில் பயன்படுத்தப்பட்ட ஹெலிகாப்டருக்கே பல கோடி ரூபாயை ஷங்கர் செலவு செய்திருப்பார் என தெரிகிறது. 4 பாடல்களுக்கு ஒட்டுமொத்தமாக 75 கோடி ரூபாய் செலவாகியுள்ளது.

இந்த பணத்தில் லப்பர் பந்து, வாழை போன்று பல நல்ல படங்களை கொடுத்திருக்க முடியும் என்கின்றனர்.

தொப் மற்றும் ஜருகண்டி பாடலில் ஷங்கர் பணத்தை தண்ணீர் போல செலவு செய்திருப்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

 சம்பளத்தை குறைத்த ராம் சரண்: படம் ஆரம்பிக்கும் 100 கோடி ரூபாய் சம்பளத்துடன் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்த ராம் சரண் படத்தின் பட்ஜெட் அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், தனது சம்பளத்தை வெறும் 65 கோடி ரூபாயாக குறைத்துக் கொண்டு நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

எப்படியாவது படத்திற்கான பட்ஜெட் அதிகம் இருந்தால் போதும் என நினைக்கும் நல்ல உள்ளத்திற்காகவே அவருக்கு பாக்ஸ் ஆபிஸ் வெற்றி கிடைக்கும் என்கின்றனர்.

ஷங்கர் சம்பளமும் கட்: இயக்குநர் ஷங்கரும் பெரிய தொகையை சம்பளமாக வாங்கி வரும் நிலையில், இந்த படத்திற்காக அவர் தனது சம்பளத்தையும் குறைத்து தில் ராஜுவுக்கு உதவி செய்திருப்பதாக தெரிகிறது.

வெறும் 35 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு இப்படியொரு பிரம்மாண்ட படத்தை ஷங்கர் இயக்கியிருக்கிறார்.

அட்லீயே 100 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்குவதாக கூறுகின்றனர். கேம் சேஞ்சர் வசூல் ரீதியாக வெற்றியடைந்தால் நிச்சயம் ஷங்கருக்கும் பங்கு கிடைக்கும்.

” கியாரா அத்வானி சம்பளம்: முந்தானையை சரியவிட்டு முதலிரவுக்கு படுக்கையை சரி செய்யும் காட்சியில் லஸ்ட் ஸ்டோரீஸ் ஹீரோயின் டா நானு என நிரூபித்துக் காட்டியிருக்கும் கியாரா அத்வானிக்கு இந்த படத்தில் 7 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டு இருப்பதாக கூறுகின்றனர்.

பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் நிச்சயம் இந்த படத்தை கியாரா அத்வானி கொண்டு செல்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எஸ்.ஜே. சூர்யாவுக்கு 5 கோடி ரூபாய், அஞ்சலிக்கு 1 கோடி ரூபாய் என சம்பளம் வழங்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

 100 கோடி ஓபனிங் வருமா?: இந்தியன் 2 தோல்வி காரணமாக இந்தியளவில் முதல் நாளில் டிக்கெட் புக்கிங் குறைவு தான்.

ஆனால், மக்கள் மத்தியில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், நாளை முதல் அடுத்த ஞாயிற்றுக்கிழமை வரை படத்தின் வசூல் உச்சத்துக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா முழுவதும் முதல் நாளில் 55 கோடி ரூபாயும் ஓவர்சீஸில் ராம் சரணுக்கு இருக்கும் ஃபேன் பேஸ் காரணமாக ஒரு 45 கோடி ரூபாய் வசூலும் முதல் நாளில் கிடைக்க வாய்ப்புள்ளது என்றும் அதிகபட்சமாக 90 முதல் 100 கோடி ஓபனிங்கை முதல் நாளே இந்த படம் அள்ளும் என்றும் கூறுகின்றனர்.

தேவரா திரைப்படம் முதல் நாளே 172 கோடி வசூல் என போஸ்டர் வெளியானது. தில் ராஜுவும் தில்லாக பெரிய கலெக்‌ஷன் என போஸ்டர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version