முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சடலம் எதிர்கால சந்ததியினருக்கு பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட வேண்டுமென முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அஜித் ராஜபக்ச, 30 வருட உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததற்காக மஹிந்த ராஜபக்ஷ தேசத்தின் போற்றத்தக்க ஆளுமை என்று கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், மகிந்த ராஜபக்சவின் மறைவுக்குப் பிறகு அவரின் உடல், மறைந்த சோவியத் தலைவர் விளாடிமிர் லெனின் மற்றும் வியட்நாம் புரட்சித் தலைவர் ஹோசிமின் போன்றவர்களின் உடல் போன்று பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட வேண்டும்.

“அந்த நாடுகளின் தலைவர்கள் எவ்வளவு விலை கொடுத்தாலும், அத்தகைய தலைவர்கள் அவர்களின் மறைவுக்குப் பிறகும் எதிர்கால சந்ததியினரால் மதிக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்தனர்,” என்று அவர் கூறினார்.

முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தலைவராக மஹிந்த ராஜபக்சவின் பாரம்பரியத்தையும் முக்கியத்துவத்தையும், நீண்ட உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகளையும் சிறுமைப்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதாக அஜித் ராஜபக்ஷ மேலும் குற்றம் சாட்டினார்.

 

Share.
Leave A Reply

Exit mobile version