இரத்தினபுரி பெல்மதுல்ல பகுதியில் 19 வயது மாணவி ஒருவரை, மதுபானம் பருகச் செய்த குற்றச்சாட்டில் தனியார் மேலதிக வகுப்பு ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மதுபானத்தை அருந்திய குறித்த மாணவி கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
19 வயது மாணவியை மதுபானம் பருகவைத்த ஆசிரியர் நையப்புடைப்பு! | Teacher Forces Girl Student To Drink Alcoholபெல்மதுல்ல நகரில் கார் ஒன்றில் வந்து இறங்கிய 19 வயது மாணவி தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரை குழுவொன்று விசாரித்துள்ளது. இதன்போது மாணவி மதுபானம் அருந்தியிருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்தநிலையில், காருக்குள் இருந்த மற்றைய நபரும் மதுபோதையில் இருந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த குழு மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் காரில் இருந்தவர் மாணவியின் மேலதிக வகுப்பு ஆசிரியர் எனத் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, அந்த நபரை அங்கிருந்த குழுவினர் தாக்கி பெல்மதுல்ல பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மேலும் கைதான சந்தேகநபரை இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.