யாழ்ப்பாணத்தில், மன உளைச்சலுக்கு உள்ளான வயோதிபப் பெண்ணொருவர் தவறான முடிவெடுத்து தனக்குத் தானே தீ வைத்து உயிரிழந்துள்ளார்.

சுன்னாகம் கிழக்கு, குமாரசுவாமி புலவர் வீதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு மங்களநாயகி (வயது 80) என்ற வயோதிப பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்ணின் பிள்ளைகள் வேலைகளுக்குச் செல்வதனால் அவர் பெரும்பாலான நேரங்களில் தனிமையில் இருந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகிய நிலையில் நேற்று முன்தினம் (25) இரவு வீட்டுக்கு அருகேயுள்ள வாழைத்தோட்டத்துக்குச் சென்று, மண்ணெண்ணெய்யைத் தன் மீது ஊற்றி தீ மூட்டி உயிர்மாய்த்துள்ளார்.

சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.

Share.
Leave A Reply

Exit mobile version