லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர். அத்துடன், 83 பேர் காயமடைந்தனர்.

ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரான ஹசன் நஸ்ரல்லாவை லெபனான் தலைநகர் பெய்ரூட் நகரில் வைத்து இஸ்ரேல் இராணுவம் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் திகதி தாக்குதல் நடத்தி கொன்றது. லெபனானின் பல பகுதிகளை இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தி தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது.

இந்த நிலையில், லெபனான் நாட்டின் பொது சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், லெபனானில் சில இடங்களை இஸ்ரேல் கைப்பற்றி இருந்தது. இந்நிலையில், இந்த விவரம் பற்றி சரிவர தெரியாமல், லெபனான் குடிமக்கள் அந்த நகரங்களுக்குள் நுழைய முயன்றனர். அப்போது, இஸ்ரேல் இராணுவம் அவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் 3 பெண்கள், லெபனான் வீரர் ஒருவர் என 15 பேர் மரணம் அடைந்தனர். 83 பேர் காயம் அடைந்தனர் என தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version