“நம் ரத்தத்தில் சிவப்பணுக்கள், வெள்ளை அணுக்கள் மற்றும் தட்டணுக்கள் என்ற மூன்று வகை அணுக்கள் உள்ளன.

இதில் சிவப்பணுக்களில் இருக்கும் ஹீமோகுளோபின் என்ற இரும்புச்சத்து நிறைந்த புரதம், ரத்தத்திற்கு சிவப்பு நிறத்தைத் தருகிறது.

நமது உடலில் ஹீமோகுளோபின் நுரையீரலில் இருந்து உடலின் மற்ற பகுதிகளுக்கு ஆக்ஸிஜனைக் கொண்டு செல்ல உதவுகிறது.

உடலில் மற்ற பகுதிகளில் இருந்து கார்பன்-டை-ஆக்ஸைடை நுரையீரலுக்கு எடுத்து செல்கிறது.

ஹீமோகுளோபின் அளவு எவ்வளவு இருக்க வேண்டும்?

ஆண்களுக்கு 14 முதல் 16 கிராம்/டெலி

பெண்களுக்கு 12முதல்14 கிராம்/டெலி

பிறந்த குழந்தைகளுக்கு 16 முதல் 20 கிராம்/டெலி

இந்த அளவிற்குக்கீழ் ஹீமோகுளோபின் குறையும்போது ரத்தச்சோகை என்கிறோம்.

ரத்தச் சோகையின் அறிகுறிகள்:– ரத்தச்சோகையின்அறிகுறிகள், ஹீமோகுளோபின் அளவைப் பொறுத்து மாறுபடுகிறது.,

ஹீமோகுளோபின் அளவைப் பொறுத்து ரத்தச்சோகையின் அறிகுறிகள் மாறுபடுகிறது. சிலருக்கு அறிகுறிகளே இல்லாமலும் இருக்கலாம்.

நாம் இயல்பாக இயங்குவதற்குப் போதுமான அளவு ஆக்ஸிஜன் வேண்டும்.

அந்த ஆக்ஸிஜனை உடல் முழுவதற்கும் கொண்டு செல்ல ஹீமோகுளோபின் வேண்டும். இரத்தச் சோகையினால் செல்களுக்குக் கிடைக்க வேண்டிய ஆக்ஸிஜன் போதுமான அளவு கிடைக்காததால் உடலில் பலவித அறிகுறிகள் தென்படுகின்றன.

அறிகுறிகள் பின்வருமாறு,

உடல் சோர்வு மற்றும் பலவீனம்,

மூச்சு விடுவதில் சிரமம்,

படி ஏறுவதில் சிரமம், தோல் வெளிறிப்போதல்,

நெஞ்சுப் பகுதியில் வலி, முறையற்ற இதயத் துடிப்பு, வேகமாக இதயம் துடிப்பதால் வரும் படபடப்பு, தலைச்சுற்றல், கை, கால்கள் சில்லிட்டுப் போதல், தலைவலி, தலைமுடி உதிர்வது

ஆரம்ப நிலையில் ரத்தச்சோகையின் அறிகுறிகள் மிதமாகத்தான் இருக்கும், அதை நாம் சரிவர கவனிக்கவில்லை எனில் மோசமடைந்துவிடும்.

ஏன் சிலநேரங்களில், உயிரிழப்பு கூட ஏற்பட வாய்ப்புள்ளது.

ரத்தச்சோகைக்கான காரணங்கள்

ரத்தச்சோகை வருவதற்குப் பல காரணங்கள் உள்ளன. ரத்த அணுக்கள் உருவாவதில் சிக்கல்கள், ரத்தம் அதிகமாக உடலை விட்டு வெளியேறுவது, உடலினுள் ரத்த அணுக்கள் சிதைக்கப்படுவது,

இந்த மூன்று காரணங்களால்த்தான் அதிக அளவில் ரத்தச்சோகை ஏற்படுகிறது.

அன்றாட வாழ்வில் பலருக்கும் ரத்தச்சோகை வருவதற்கான காரணங்கள் பின்வருமாறு,

ஊட்டச்சத்து குறைபாட்டினால் வருவது – இரும்புச் சத்து, போலேட், வைட்டமின் பி12.அதிகமான இரத்தப்போக்கு- விபத்தின் போது ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கு, கடுமையான ரத்தச்சோகையை ஏற்படுத்துகிறது.

அதுமட்டுமல்லாமல் உயிரிழப்பையும் ஏற்படுத்துகிறது. கிருமிகளின் தாக்கம் – எச்.ஐ.வி. / எய்ட்ஸ். பெண்களுக்கு மாதவிடாய் காலங்களி்ல் அதிகமாக ரத்தம் வெளியேறுதல்.

வயிற்றினுள் ரத்தப்போக்கு. மலம் வழியாக ரத்தம் வெளியேறுதல். சிறுநீரகக் கோளாறு – எரித்ரோபாய்டின் குறைபாடு. எலும்பு மஜ்ஜையில் ஏற்படும் குறைபாடு.

புற்று நோய்த்தாக்கம் மூக்குப்பொடி, புகையிலை, குட்கா, பான்மசாலா, ஹான்ஸ் ஆகியவற்றைப் பயன்படுத்துவது. மரு.அ.வேணிசிலவிதமான புற்று நோய்க்குப் பயன்படுத்தும் மருந்துகள் ரத்த அணுக்களைப் பாதிக்கும்.

புகைப்பழக்கம், மதுப்பழக்கம், நச்சுஇரசாயனங்கள் மற்றும் வேதியியல் பொருட்களை எடுத்துக் கொள்வது

ஹீமோகுளோபினோபதி என்னும் பிறவிக் குறைபாடு தலாஸ்மியா, ஹீமோலைடிக் அனீமியாஸ் மற்றும் ரத்தம் உறைவதில் ஏற்படும் மரபணுக் கோளாறுகள். முடக்கு வாதம், ஆட்டோ இம்யூன் கோளாறுகள் இவை

அனைத்தும் ரத்தச்சோகை வருவதற்கான காரணங்கள் ஆகும்.

ரத்தச்சோகையினால் ஏற்படும் சிக்கல்கள்

சரியான நேரத்தில் ரத்தச்சோகையைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிட்டால், ரத்தச்சோகை பல உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

அவை… இதயப்பிரச்சனைகள்: ரத்தச்சோகை, விரைவான அல்லது ஒழுங்கற்ற இதயத்துடிப்புக்கு (அரித்மியா) வழிவகுக்கும்.

ரத்தச்சோகையுடன் இருக்கும்போது, ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் பற்றாக்குறையை ஈடுசெய்யவும், அதிக ரத்தத்தை வெளியேற்றவும் இதயம் அதிக அளவு வேலை செய்கிறது.

இது விரிவாக்கப்பட்ட இதயம் அல்லது இதயச் செயலிழப்புக்கு வழிவகுக்கும்.கர்ப்பகால சிக்கல்கள்: ஃபோலேட் குறைபாட்டினால் கர்ப்பிணிப் பெண்களுக்குக் குறைமாதக் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

குறிப்பாக மூளை மற்றும் தண்டுவடத்தில் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். அரிவாள் செல் ரத்தச்சோகை சில பரம்பரை ரத்தச்சோகைகள் உயிருக்கு ஆபத்தான சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

ரத்தச்சோகை உள்ளவர்கள் ரத்த தானம் செய்யமுடியாது ரத்தச்சோகைக்கான

சிகிச்சை முறைகள் என்ன?

ரத்தச்சோகைக்கான சிகிச்சையானது அதற்கான காரணங்களைப் பொறுத்து மாறுபடுகிறது. இரும்புச்சத்துக் குறைபாட்டினால் ஏற்படும் ரத்தச்சோகையாக இருந்தால், இரும்புச்சத்தை வாய்வழியாக எடுத்துக்கொள்வது,

உணவில் மாற்றங்கள் செய்வது அல்லது வைட்டமின் \”சி\” அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வது,

இரும்புச்சத்தின் அளவு மிகவும் குறைவாக இருக்கும்போது ரத்தநாளம் வழியாக மருந்துகளைச் செலுத்தி விரைவாகச் சரிசெய்யலாம்.

கிருமிகளின் தாக்கத்தினால் வரும் ரத்தச்சோகைக்குக் கிருமிகளை உடலில் அழிப்பதற்கான சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதிகமான இரத்தப்போக்கு உயிருக்கு ஆபத்தானது என்பதால் உடனடியாக இரத்தம் உடலினுள் செலுத்தப்படுகிறது.

சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களுக்கு எரித்ரோபாய்டின் என்ற மருந்து கொடுக்கப்படுகிறது. எலும்பு மஜ்ஜையில் ஏற்படும் குறைபாட்டிற்கு எலும்பு மஜ்ஜை மாற்றம் செய்யப்படுகிறது.

புற்று நோய்த்தாக்கம் உள்ளவர்களுக்கு அதற்குரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. ரத்த அணுக்களைப் பாதிக்கும் மதுப்பழக்கம், நச்சு ரசாயனங்கள் மற்றும் புகைப்பழக்கம் இவற்றிலிருந்து விலகி இருப்பது நல்லது.

இப்படி ரத்தச்சோகை வருவதற்கான காரணங்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ரத்தச்சோகை வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாகப் பசலைகீரை உள்ளிட்ட பிற கீரைகள், காய்கறிகள், பேரீச்சை போன்ற உலர்ந்த பழங்கள், பீன்ஸ், பருப்பு வகைகள் ஆகியவற்றில் இரும்புச்சத்து அதிகம்…”,

Share.
Leave A Reply

Exit mobile version